Menaka Mookandi / 2012 பெப்ரவரி 01 , பி.ப. 12:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

போய்ஸ் புகழ் சித்தார்த் மற்றும் அமலாபோல் நடிப்பில் வெகு விரைவில் வெளியாகவுள்ள திரைப்படம் 'காதலில் சொதப்புவது எப்படி?' தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் இத்திரைப்படம் தயாராகி வருகின்றது.
இத்திரைப்படத்தின் தமிழ் இசை வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் இடம்பெற்றது. இருப்பினும் அதில் நடிகை அமலா போல் கலந்துகொள்ளவில்லை. இதனால் பல்வேறு விமர்சனங்களும் வெளியாகியிருந்தன. இருப்பினும் பரீட்சையைக் காரணம் காட்டி நிலைமையை சமாலித்து வந்தார் அமலா.
இதனையடுத்து தெலுங்குப் பாடல்கள் இசை வெளியீட்டு விழா அண்மையில் ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக சென்றிருந்த அமலாபோல், ரசிகர்கள் மத்தியில் சிக்கித் தவித்துள்ளார். அத்துடன் ரசிகர்களின் ஆர்வக் கோளாறு அமலாவின் உடலில் காயங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கில் ஏற்கெனவே அறிமுகமானவர் அமலா. மேலும் அவரது தமிழ்ப் படங்களும் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் அவர் பிரபலம். எனவே அமலாபோலை காண இசைவிழா நடந்த அரங்கம் எதிரில் தெலுங்கு ரசிகர்கள் குவிந்தனர். விழா முடிந்து அமலாபோல் வெளியே வந்த போது ஒட்டோகிராப் வாங்குவதற்காக சுற்றிவளைத்துள்ளனர்.
இதனால் ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிக் கொண்டார் அமலா. ரசிகர்களில் சிலர் அமலாபோலின் கையை பிடித்து இழுத்துள்ளனர். இடுப்பில் கை போட்டுள்ளனர். இதனால் அவர் உடம்பில் நகக்கீறல்கள் பட்டு காயமும் ஏற்பட்டுள்ளது. சில நிமிடங்களுக்குப் பிறகு அங்கு நின்ற பாதுகாவலர்கள் விரைந்து சென்று ரசிகர்களின் பிடியில் இருந்து அமலாபோலை மீட்டு போலிஸாரின் வாகனத்தில் அனுப்பி வைத்துள்ளனர்.



21 minute ago
36 minute ago
3 hours ago
Galba Thursday, 02 February 2012 03:02 AM
அடுத்த பட சம்பளத்தில் சரிக்கட்டிவிடுவர் ...!!!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
36 minute ago
3 hours ago