Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Menaka Mookandi / 2012 பெப்ரவரி 03 , பி.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
பில்லா, ஏகன் திரைப்படங்களுக்கு பின்னர் அஜீத் ஜோடியாக மீண்டும் நடிக்கிறார் நயன்தாரா. பிரபுதேவாவைவிட்டு நயன்தாரா பிரிந்துவிட்ட செய்தி பரவியதிலிருந்து, நயன்தாராவைத் தேடி நிறைய திரைப்பட வாய்ப்புகள் வர ஆரம்பித்துவிட்டன. இத்தனை நாட்களும் பெரிய நடிகர்களின் பட வாய்ப்புகளைக்கூட பிரபுதேவாவுக்காக உதறிவந்த நயன்தாரா, இப்போது வாய்ப்புகளை மறுக்காமல் ஒப்புக்கொள்ள ஆரம்பித்துள்ளார்.
தெலுங்கில் நாகார்ஜுன் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ள அவருக்கு 1.40 சம்பளம் பேசப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அடுத்து தமிழில் அஜீத் ஜோடியாக நடிக்கவும் கிட்டத்தட்ட இதே சம்பளத்தில் பேசியுள்ளார்களாம் நயன்தாராவிடம். அனுஷ்காவைத்தான் முதலில் ஜோடியாக தேர்வு செய்தனர். ஆனால் தெலுங்கு படங்களில் அவர் பிஸியாக இருப்பதால் வேறு நாயகி தேடினர்.
இந்நிலையிலேயே அஜீத்துடன் நடிக்க நயன்தாரா சம்மதம் தெரிவித்துவிட்டாராம். இதுகுறித்து இயக்குனர் விஷ்ணுவர்த்தனிடம் கேட்டபோது, 'அஜீத் ஜோடியாக நயன்தாராவிடம் பேசியிருப்பது உண்மைதான். ஆனாலும் அவரிடம் இன்னும் ஒப்பந்தம் எதுவும் செய்துகொள்ளவில்லை' என்றார்.
இதேவேளை, 'தான் இத்தனை நாட்களிலும் சிக்கியிருந்த பெரிய நெருக்கடியில் இருந்து இப்போது ஒருவழியாக மீண்டுவிட்டேன்' என்று நடிகை நயன்தாரா கூறியுள்ளார். பிரபு தேவாவுடனான தீவிர காதல் காரணமாக சினிமா வாழ்க்கையைத் துறந்திருந்தார் நயன்தாரா. அத்துடன், அவருக்கான கிறிஸ்தவ மதத்திலிருந்து இந்துவாகவும் மாறினார். ஆனால் பிரபு தேவா தன்னை திருமணம் செய்து கொள்ளப்போவதில்லை, என்பதைப் புரிந்து கொண்ட நயன்தாரா, இனியும் காலம் தாழ்த்த வேண்டாம் என்று உறவைத் துண்டித்துக் கொண்டார் என்று இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து கடந்த ஒரு வாரமாக செய்திகள் வந்தாலும், சம்பந்தப்பட்ட இருவரும் இதுபற்றி எதுவும் கூறாமல் இருந்தனர். இந்த நிலையில் மீண்டும் தமிழ், தெலுங்கில் பிஸியாகிவிட்ட நயன்தாரா முதல் முறையாக தனது காதல் முறிவு குறித்து மறைமுறைமுகமாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், 'நான் சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்தேன். அது எனக்கு மிகுந்த நெருக்கடியை உருவாக்கியிருந்தது உண்மைதான். இப்போது ஒருவழியாக அதிலிருந்து மீண்டு வந்துவிட்டேன்.
இனி முழு கவனமும் சினிமாதான். இப்போது தெலுங்கு படத்தில் நாகார்ஜுன் ஜோடியாக நடிக்கிறேன். அது ஒரு காதல் கதை. தமிழ் திரையுலகம் எனக்கு பெரிய நட்சத்திர அந்தஸ்தை கொடுத்தது. தெலுங்கு பட உலகம் என்னை இன்னொரு படி உயரத்தில் கொண்டு போனது. இந்த இரு மொழிகளிலுமே தொடர்ந்து நடிப்பேன்' என்றார்.
kamran Monday, 06 February 2012 04:59 PM
ஆசை 60 , மோகம் 30 புரியாதோ உனக்கு ?
Reply : 0 0
rifnas Saturday, 11 February 2012 05:21 AM
பொம்புள இப்படித்தான் இருக்க வேண்டும்.
Reply : 0 0
anfash Monday, 13 February 2012 12:32 PM
நடிப்பை நிஜத்திலும் காண்பிக்கிறாள் ...
Reply : 0 0
rafee Monday, 12 March 2012 03:05 PM
ரம்லத்தின் வேதனை இப்போது புரியும் இல்லையா
Reply : 0 0
rafee Monday, 12 March 2012 03:08 PM
ரம்லத்தின் வேதனை இப்போது புரியும் இல்லையா?
Reply : 0 0
haleemraja Wednesday, 21 March 2012 06:47 PM
சீதை நல்ல நடிகை
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago