Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Menaka Mookandi / 2012 பெப்ரவரி 07 , மு.ப. 06:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அவரது இளைய மகள் சௌந்தர்யாவின் இயக்கத்தில் தற்போது தயாராகிக்கொண்டிருக்கும் திரைப்படம் கோச்சடையான். இந்தத் திரைப்படம் தொடர்பான அறிவிப்பு வெளியானபோது, ரஜினி ரசிகர்களுக்கே அதில் பெரிய நம்பிக்கை இருக்கவில்லை.
ஆனால் இன்று, ரசிகர்கள் மத்தியில் மாத்திரமல்ல அனைத்துலக திரைத்துரையினரின் எதிர்ப்பார்ப்பையும் ஈர்த்துள்ளது கோச்சடையான். இந்தத் திரைப்படம் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள முதல் புகைப்படத்தைப் பார்த்ததிலிருந்து அவர்களால் ஆர்வத்தை அடக்க முடியவில்லை. அந்த வகையில் கே.எஸ்.ரவிக்குமார் - சௌந்தர்யா ரஜினி குழுவுக்கு எடுத்த எடுப்பிலேயே வெற்றிகிடைத்துள்ளது எனலாம்.
ஓங்கி உயர்ந்த மலையுச்சி. அதில் விண்ணுக்கும் மண்ணுக்குமாக, ஒற்றைக் காலில் ஆக்ரோஷமாக நிற்கும் ரஜினி. ஜடா முடியும் அதில் தங்க நிற சூலமும் நீண்ட தாடியுமாக நிற்கிறார். இடையில் நீல நிற பட்டுக் கச்சை அணிந்திருக்கிறார். அந்தக் கச்சையின் இன்னொரு நுனி விண்ணுக்கு நீள்கிறது. கிட்டத்தட்ட சிவபெருமானின் ருத்ரதாண்டவம் மாதிரியான ஒரு தோற்றம் அது. பார்த்த உடன் மெய் சிலிர்க்க வைக்கிறது.
இந்த புகைப்படத்தில் ரஜினியின் உடல் 8 பெக்ஸ் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் வெளியானதிலிருந்து ஊடகங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் ஒரே பரபரப்பு. எங்கும் ரஜினியின் கோச்சடையான் புகைப்படங்களே. அதற்கேற்ப, ரஜினியும் பாரபட்சமின்றி அத்தனை நாளிதழ்களுக்கும் கோச்சடையான் டிசைனை விளம்பரமாகக் கொடுத்திருந்தார்.
இந்தியாவின் அத்தனை முன்னணி இணையதளங்களும் 'கோச்சடையான் பர்ஸ்ட் லுக்' என்ற தலைப்பில் தமிழ், ஆங்கில வடிவமைப்புக்களை வெளியிட்டுள்ளன.
PUTTALAM MANITHAN Tuesday, 14 February 2012 01:29 AM
கோச்சடையான் கோபித்துக்கொண்டு போகாமல் பார்த்துக்கொள்ளுங்கள் ரசிகர்களே ....
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago