Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
A.P.Mathan / 2012 பெப்ரவரி 13 , பி.ப. 01:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெள்ளித்திரை நடிகர்கள் இறுதியில் சின்னத்திரைக்கு வந்துவிடுவதொன்றும் புதிதல்ல. ஆனாலும் வெள்ளித்திரையில் பிரபலமாக இருக்கின்றபோதே சின்னத்திரையில் தோன்றுவதென்பது அதிர்ஷ்டவசமாகத்தான் இடம்பெறும். அந்த வரிசையினை நடிகைகள் ஏற்கனவே பிடித்துள்ளனர். சில நடிகர்களும் இரு தோணியில் கால்வைத்து வருகின்றனர்.
மிக அண்மையில் சின்னத்திரையில் ஒப்பந்தமாகிய முன்னணி நடிகர் என்றால் அது சூர்யா தான். வெள்ளித்திரையில் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்கின்ற சூர்யா – சின்னத்திரையிலும் பிரகாசிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்திய தனியார் தொலைக்காட்சியொன்றில் கோடிகளை கொட்டிக் கொடுக்கும் நிகழ்ச்சியொன்றை தொகுத்து வழங்கவுள்ளார் சூர்யா. இந்நிகழ்ச்சியின் விளம்பரங்களை இப்பொழுது அந்த தொலைக்காட்சியில் அடிக்கடி நீங்கள் பார்க்கலாம்.
மூல வடிவம் ஆங்கிலமாக இருந்த போதிலும் ஹிந்தியில் அமிர்தா பச்சனின் பங்களிப்போடு இந்நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டபோது இந்திய ரசிகர்கள் இதற்கு அடிமையானார்கள். இப்பொழுது அதனை தமிழில் ஒளிபரப்பவுள்ளனர். இந்நிகழ்ச்சியினைத்தான் சூர்யா தொகுத்து வழங்கவுள்ளார்.
இது இப்படியிருக்க - சூர்யாவைப் போன்று முன்னணி நாயகனாக வலம் வந்துகொண்டிருக்கின்ற நடிகர் விக்ரமுக்கும் தனியார் தொலைக்காட்சிகள் வலைவிரிக்கத் தொடங்கியுள்ளனவாம். சூர்யா தொகுத்து வழங்கவுள்ள நிகழ்ச்சியைப் போல் வடிவமைக்கப்பட்ட நிகழ்ச்சியொன்றை தொகுத்து வழங்குமாறு நடிகர் விக்ரமை தனியார் தொலைக்காட்சியொன்று அணுகியுள்ளதாம். இதனை விக்ரம் தரப்பினரும் உறுத்திப்படுத்தியிருக்கின்றனர்.
குறித்த நிகழ்ச்சி தனக்கு பிடித்திருப்பதாகவும் அதனை தொகுத்து வழங்குவது தொடர்பில் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் விக்ரம் குறிப்பிட்டுள்ளார். ஒப்புக்கொண்ட திரைப்பட வேலைகளை முடித்துக் கொடுத்துவிட்டு சின்னத்திரை நிகழ்ச்சியில் நடிகர் விக்ரம் பங்குபற்றுவார் என்று செய்திகள் பரவியிருக்கின்றன.
பல முன்னணி நடிகைகள் சின்னத்திரையில் கலக்குவதுபோல் முன்னணி நடிகர்களும் வந்திருப்பது ஆரோக்கியமான அறிகுறியே..!
riswan Tuesday, 14 February 2012 10:49 PM
இதெல்லாம் இந்திய கலாச்சாரம் சினிமாக்காரர்களால் அழிந்துகொண்டு வருகிறது என்பதற்கு இது ஒரு ஆதாரமே !!!!
Reply : 0 0
shameer Tuesday, 21 February 2012 06:48 PM
இதெல்லாம் இந்திய கலாச்சாரம் சினிமாக்காரர்களால் அழிந்துகொண்டு வருகிறது என்பதற்கு இது ஒரு ஆதாரமே !!!!
Reply : 0 0
mohamed fahis Tuesday, 29 January 2013 05:38 PM
இதெல்லாம் இந்திய கலாச்சாரம் சினிமாக்காரர்களால் அழிந்துகொண்டு வருகிறது என்பதற்கு இது ஒரு ஆதாரமே !!!!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago