2025 மே 20, செவ்வாய்க்கிழமை

மருதநாயகத்தில் கமலுடன் ரஜனி...

A.P.Mathan   / 2012 பெப்ரவரி 17 , மு.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பெரும் எதிர்பார்ப்புடன் 1997ஆம் ஆண்டு இங்கிலாந்து மகாராணி எலிசபத்தினால் தொடக்கி வைக்கப்பட்ட கமல்ஹாசனின் மருதநாயகம் படம் இப்பொழுதும் கிடப்பிலேயே இருக்கிறது. மருதநாயகம் திரைப்படம் கமல்ஹாசனின் கனவுப் படம். எப்பாடு பட்டேனும் தான் உயிருடன் இருக்கும்போதே மருதநாயகத்தை உருவாக்கிவிட வேண்டுமென பல மேடைகளிலும் பேட்டிகளிலும் கமல் கூறிவருகிறார். அநேகமாக இப்பொழுது மருதநாயகம் மீண்டும் தூசு தட்டி எடுக்கப்பட்ட திருப்தியில் இருக்கிறார் கமல்.

எந்திரன் என்ற பிரமாண்ட திரைப்படத்தை தயாரித்த சன் நிறுவனத்திடம் ஏற்கனவே மருதநாயக தயாரிப்பு பற்றி பேச்சுக்கள் நடைபெற்றன. இருப்பினும் ஒரு தீர்மானத்திற்கு அவர்களால் வரமுடியவில்லை. இருந்தபோதிலும் கமல் தன்னுடைய கனவினை கலைப்பதாக இல்லை. பல முன்னணி நிறுவனங்களுடன் பேச்சுக்களில் ஈடுபட்டு வருகிறார். மறுபடியும் கமல் - மருதநாயகம் பற்றி அதிகமாக பேசத் தொடங்கியிருக்கிறார்.

இம்முறை மருதநாயகத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் மற்றுமொரு கதையினை கூறியிருக்கிறார் கமல். தன்னுடைய ஆருயிர் நண்பன் ரஜனிக்காக மருதநாயகத்தில் ஒரு பாத்திரத்தினை உருவாக்கியிருப்பதாக கமல் கூறியிருக்கிறார். “நானும் ரஜனியும் 10இற்கும் மேற்பட்ட படங்களில் இணைந்திருக்கிறோம். ஆனால் அண்மைக்காலத்தில் அது முடியவில்லை. பூனைக்கு யார் மணி கட்டவது என்று காத்திருந்தார்கள். அந்த மணியை நானே கட்ட முடிவெடுத்திருக்கிறேன். மருதநாயகத்தில் ரஜனி என்னுடன் இணைவார்” என்று ஒரு பேட்டியிலே கமல் கூறியிருக்கிறார்.

இந்த இனிப்பான செய்தியுடன் மருதநாயக படப்பிடிப்பு தொடர்பான செய்தி எப்பொழுது வெளிவரும் என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.


You May Also Like

  Comments - 0

  • Mullla Friday, 17 February 2012 11:35 PM

    வாழ்த்துக்கள்.. அனைத்துலக சினிமா ரசிகர்கள் "மருதநாயகத்தினை" ஆவலுடன் பார்க்கின்றோம்..

    Reply : 0       0

    ibnuaboo Saturday, 18 February 2012 12:20 AM

    கமல் யதார்த்த பூர்வமான சினிமா கலைஞர் மட்டுமல்ல, இலக்கிய, கலை சார்ந்த புதுமை சிந்தனையாளர். மருதநாயகம் இஸ்லாத்தை தழுவிய சுதந்திரபோராளி. அவர் பெயர் யூசுப் கான். மிக சிறந்த மார்க்க பக்தியாளர். இந்தியா பிரிட்டிசாரால் ஆளப்பட்ட காலத்தில் பிரான்ஸ் படை, பிரிட்டிஸ் படைகளில் பெரும் வீரராக சேவையாற்றியவர், பின் தானே அரசாட்சியை நிறுவி வெள்ளையருக்கு எதிராக போராடி கடைசிவரை மன்னிப்பு கேட்காமல் தூக்கு கயிர் ஏற்றவர். இவர் வீரம் போல் இந்திய மண்ணில் எவரும் பிறக்கவிள்ளயாம்.

    Reply : 0       0

    Clement Thursday, 23 February 2012 02:48 AM

    யூசுப் கான் என்பது மருதநாயகம் இல்லை. மருதநாயகம் ஒரு இந்து சுதந்திர போராட்ட வீரர்.

    Reply : 0       0

    ibnuaboo Friday, 24 February 2012 03:20 AM

    யூசுப் கான் மருதநாயகம் இல்லாவிட்டால் ,மருதநாயகம் தான் யூசுப்கான். இந்திய சரித்திரத்தை எழுதிய இந்து சரித்திர ஆசிரியரே ஆதாரங்களுடன் எழுதியுள்ளார். இதனால் தான் ஆர்.எஸ்.எஸ். இதை எரிச்சலுடன் கமல் படத்தை தடுக்க முயன்றுள்ளது. கிலேமேன் உங்களுக்கு இஸ்லாத்தின் மீது எப்போதும் வெறுப்புதான்.

    Reply : 0       0

    shakti Saturday, 25 February 2012 03:37 AM

    நியாயமான கருத்துகளை ஏற்க தயங்க கூடாது சலோமன். உண்மையான வரலாற்றை மறைக்கவும் கூடாது. இப்னு .... சபாஷ்.

    Reply : 0       0

    sajeer Saturday, 07 July 2012 03:23 PM

    சிலமன் உண்மையான கருத்தை எப்போதும் நிராகரிக்க கூடாது அப்படி நிராகரிப்பதானல் சரியான ஆதாரம் இருக்கனும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X