2025 மே 20, செவ்வாய்க்கிழமை

மீண்டும் அஜித்துடன் வெங்கட் பிரபு

A.P.Mathan   / 2012 பெப்ரவரி 21 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் அஜித்துக்கு நற்பெயரைத் தேடிக்கொடுத்த படம் 'மங்காத்தா'. கடந்த ஆண்டில் மிகப்பெரிய வெற்றிப்படமாக மங்காத்தா அமைந்திருந்தது. அண்மைக்காலமாக மிகச்சிறந்த படங்களை இயக்கி வருகின்ற வெங்கட் பிரபு தான் மங்காத்தாவினையும் இயக்கியிருந்தார்.

தன் இயல்பான நடிப்பின் மூலம் மங்காத்தாவில் அசத்திய அஜித்திற்கும் மறக்கமுடியாத அனுபவமாகியது அது. கலகல இயக்குநர் வெங்கட் பிரபுவிற்கும் அஜித்துக்குமிடையிலான நட்பும் மங்காத்தாவின் பின்னர் மேலும் பலம் பெறத்தொடங்கியது. 'மங்காத்தா-2' வெகுவிரைவில் வெளிவரும் என்ற தகவலும் அடிபடத் தொடங்கியது. ஆனால் உத்தியோகபூர்வமாக யாரும் இதனை தெரிவிக்கவில்லை.

இந்நிலையில், வெங்கட்பிரபு தனது பதிவில் குறிப்பிட்டுள்ள விடயம் மீண்டும் அஜித் - வெங்கட் பிரபு கூட்டணி பற்றி சிந்திக்க வைத்திருக்கிறது. 'நீண்ட இடைவெளியின் பின்னர் நம்ம தலை அஜித்தை சந்தித்தேன். நாங்கள் மங்காத்தா நாட்களை மிகவும் இழந்து தவித்தோம். அதனால் இருவரும் மீண்டும் இணைவது பற்றி முடிவெடுத்திருக்கிறோம். இது வெற்றி பெறுமென நம்புகிறேன்' என வெங்கட் பிரபு தன்னுடைய பதிவிலே குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த சிறிய தகவல் அஜித் ரசிகர்களை மேலும் உட்சாகப்பட வைத்திருக்கிறது. அஜித் தற்சமயம் 'பில்லா-2' படப்பிடிப்பில் மும்முரமாக இருக்கிறார். அதேபோல் வெங்கட் பிரபுவும் சூர்யாவுடன் இணைந்திருக்கிறார். ஆகையினால் அஜித் - வெங்கட் பிரபு மறுபடியும் இணைவது பற்றிய உத்தியோகபூர்வ அறிவித்தல் அஜித்தின் பிறந்தநாளான மே 1ஆம் திகதி வெளிவரலாம் என நம்பப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X