Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Menaka Mookandi / 2012 பெப்ரவரி 28 , மு.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
'எனக்கு கொஞ்சம், கொஞ்சம் தமிழ் தெரியும்' என்று கொஞ்சும் தமிழில் பேசும் நடிகை நமீதாவுக்கு தமிழில் பிடித்த வார்த்தை 'மச்சான்ஸ்' என்று கூறியுள்ளார். சரி, வாய் நிறைய மச்சான்ஸ் என்கிறீர்களே, அதற்கு அர்த்தம் தெரியுமா என்று கேட்டால் நட்பு என்கிறார் நமீதா.
நடிகை நமீதா எந்த விழாக்களுக்கு வந்தாலும் சரி, உடனே கூட்டத்தைப் பார்த்து ஹாய் மச்சான்ஸ் என்று கொஞ்சும் தமிழில் பேசி, ரசிகர்களை நோக்கி ஒரு பறக்கும் முத்தம் கொடுப்பார். உடனே கூட்டத்தில் பயங்கர விசில் மற்றும் கைத்தட்டல் சத்தம் கேட்கும்.
நமீதாவின் பறக்கும் முத்தத்தைப் பிடிக்க ரசிகர்கள் முந்தியடிப்பார்கள். எப்பொழுதுமே ரசிகர்களை மச்சான்ஸ் என்றே இனிக்க, இனிக்க அழைப்பார். இப்படித்தான் அம்புலி பாடல் வெளியீட்டு விழாவில் ரசிகர்களை ஹாய் மச்சான்ஸ் என்று அழைத்து பறக்கும் முத்தம் கொடுக்க அது அதே மேடையில் இருந்த இயக்குனர் சேரனை கடுப்பாகிவிட்டது.
'என்ன இந்தப் பெண் இப்படி பேசிட்டுப் போகுது... ரசிகர்களை மச்சான்கள் என்கிறார். அதை கேட்டு எல்லோரும் கை தட்டி விசில் அடிக்கிறீர்கள். பொதுமேடையில் அவர் இதுபோல் பேசி இருக்கிறார். இது சரிதானா? நம்ம வீட்டு பெண்கள் இதுபோல் மேடையில் நின்று முத்தம் கொடுத்தாலோ மச்சான்கள் என்றாலோ ரசிப்போமா... மக்கள் மனம் மாறிப்போச்சு' என்று சேரன் பொறிந்துதள்ளியள்ளாராம்.
piththan Wednesday, 29 February 2012 11:18 PM
இதெல்லாம் ஒரு பொழப்பு இதற்கு பிச்சை எடுப்பது சிறந்தது. விபச்சாரம் ஒழிய வேண்டும்..............
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
52 minute ago
56 minute ago
58 minute ago