2025 மே 20, செவ்வாய்க்கிழமை

கவர்ச்சி நடிகை அல்போன்சா தற்கொலை முயற்சி; காதலர் தற்கொலை

Menaka Mookandi   / 2012 மார்ச் 05 , மு.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பாட்ஷ் திரைப்படத்தில் வரும் 'ரா... ரா... ராமையா...' பாடல் மூலம் குத்தாட்ட நடிகையான அறிமுகமானவர் கவர்ச்சி நடிகை அல்போன்சா. இவரின் உடன் பிறந்த தம்பிதான் டான்ஸ் மாஸ்டர் ரொபர்ட். முதல் பாடலிலேயே அனைவரையும் கவர்ந்துவிட்ட இவர் தொடர்ந்தும் பல திரைப்படங்களில் பாடல் காட்சிகளுக்கு மாத்திரம் தோன்றி தனக்கென ஒரு தனி இடத்தை தக்கவைத்துக் கொண்டவர்.

இருப்பினும், பரபலமாகியிருந்த போதே திடீரென்று திரையுலகிலிருந்து காணாமல் போயிருந்தார் அல்போன்சா. அவர் காதலித்து வந்த வினோத் குமார் என்பவருடன், சென்னை, விருகம்பாக்கத்தில் குடும்பம் நடத்தி வந்ததாலேயே அல்போன்சா, திரையுலகிலிருந்து காணாமல் போனார் என்று காரணம் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், அல்போன்சாவின் காதலரான வினோத் குமார், நேற்று ஞாயிற்றுக்கிழமை, கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, அல்போன்சாதும் பெருமளவு தூக்க மாத்திரைகளை விழுங்கி தற்கொலைக்கு முயற்சித்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அல்போன்சாவுடன் அவரது காதலருக்கு ஏற்பட்ட தகராரே அவர் தற்கொலை செய்துகொண்டதற்கு காரணமாயுள்ளது என்று கூறப்பட்டாலும், அவ்வாறில்லை, வினோத்குமார் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார் என்று அவரின் உறவினர்கள் அல்போன்சா மீது குற்றஞ்சாட்டியுள்ளனர்.

அல்போன்சாவின் காதலரின் தற்கொலை, அல்போன்சாவின் தற்கொலை முயற்சி ஆகியவற்றால் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0

  • uvais.m.s Tuesday, 06 March 2012 01:12 AM

    நடிகர் நடிகைகளில் இதெல்லாம் சகஜம் தானே. பொதுவாக நடிகைகள் தான் தற்கொலை செய்து கொள்ளுவார்கள். ஆனால் காதலன் தூக்குமாட்டி தற்கொலை செய்தது தான் விசித்திரமாக உள்ளது.

    Reply : 0       0

    நிந்தவூறான் சொல்கிறான் Monday, 12 March 2012 06:04 PM

    இவங்களுக்கெல்லாம் இதெல்லாம் சகஜம் தானே !!!

    Reply : 0       0

    fasmeer Wednesday, 04 April 2012 07:09 AM

    கடுப்பேத்துறார் மை லார்ட்.

    Reply : 0       0

    Nabeel Sunday, 03 June 2012 11:41 PM

    இதல்லாம் படம்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X