Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Menaka Mookandi / 2012 மார்ச் 06 , பி.ப. 01:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகை அனுஷ்காவுடன் நடிப்பதற்கு பல முன்னணி ஹீரோக்கள் விருப்பம் தெரிவித்துள்ள நிலையில் ரவிக்கும் அந்த ஆசை ஏற்பட்டுள்ளது. ஆனால் ரவியுடன் நடிப்பதற்கு அனுஷ்காவுக்கு இவ்வாண்டில் திகதிகள் இல்லாத நிலையில் அவருக்காக காத்திருக்கிறாராம் ரவி.
இயக்குனர் அமீரின் ஆதி பகவன் திரைப்படத்திலும் பூலோகம் என்ற மற்றுமொரு திரைப்படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார் நடிகர் ஜெயம் ரவி. இவை தவிர, அவர் முதன் முறையாக விளம்பரம் படம் ஒன்றிலும் நடித்த வருகின்றாராம்.
இந்நிலையில், ஊடகவியலாளர்கள் சிலரிடம் அண்மையில் கருத்து தெரிவித்துள்ள ரவி, தனக்கு பிடித்த நடிகை ஜெனிலியா என்றும் தான் அனுஷ்காவுடன் ஜோடி சேர ஆசைப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்துள்ள ரவி, 'எனது தந்தை மோகனும், அண்ணன் ராஜாவும் நான் சினிமாத்துறையில் வளர உறுதுணையாக இருக்கின்றனர். கொலிவூட்டில் எனக்கு மிகவும் பொருத்தமான நடிகை என்றால் அது ஜெனிலியா தான். இருப்பினும் அனுஷ்காவுடன் சேர்ந்து நடிக்கவே மிகவும் ஆசையாக உள்ளது' என்று கூறியுள்ளார் ரவி.
Gabba Wednesday, 07 March 2012 04:20 AM
ஆசை யாரை விட்டது ?
Reply : 0 0
haleem Sunday, 11 March 2012 09:11 PM
ரவி ஏனப்பா இந்த ஆசை.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
52 minute ago
56 minute ago
58 minute ago