2025 மே 20, செவ்வாய்க்கிழமை

ஸ்ரேயாவின் ஆவேசம்...

Menaka Mookandi   / 2012 மார்ச் 08 , பி.ப. 02:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மம்முட்டி, பிருதிவிராஸ், ஸ்ரேயா நடித்து வெளியாகியுள்ள மலையாளத் திரைப்படம் 'போக்கிரி ராஜா'. இந்தத் திரைப்படம் 'ராஜா போக்கிரி ராஜா' என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது. இதனை மலேசியா பாண்டியன் என்பவர் வெளியிடவுள்ளார். இந்நிலையில், மேற்படி திரைப்படத்தின் மலையாள தயாரிப்பாளரான தோமஸ் அன்டணி மீது தென்னிந்திய நடிகர் சங்கத்தில் முறைப்பாடு செய்துள்ளார் ஸ்ரேயா.

ஸ்ரேயா தனது முறைப்பாட்டில், 'போக்கிரி ராஜா திரைப்படத்தில் நான் நடிக்க ஒப்பந்தம் செய்துகொண்டபோதே அந்த திரைப்படத்தை வேறு மொழிகளில் மொழிமாற்றம் செய்யக்கூடாது என்று ஒப்பந்தம் செய்துகொண்டேன். அந்த ஒப்பந்தத்தை தோமஸ் அன்டணி மீறிவிட்டார். எனவே அந்த படத்தை தமிழ் உட்பட வேறு மொழிகளில் மொழிமாற்றம் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும்' என்று கூறியுள்ளார் ஸ்ரேயா.

ஸ்ரேயாவின் இந்த முறைப்பாட்டுக்கு பின்னர் இது குறித்து தோமஸ் அன்டணி வாய் திறக்கவே இல்லை. இருப்பினும் அந்தத் திரைப்படத்தை மொழிமாற்றம் செய்யும் மலேசியா பாண்டியன், ஸ்யாவுக்கு பதில் கொடுத்துள்ளார்.

'என் திரைப்படத்தை தடை செய்ய முயற்சிப்பவர்கள் மீது நீதிமன்றத்தில் நட்டஈடு வழக்கு தொடருவேன்' என்று அவர் கூறியிருந்தார். மேலும் ஸ்ரேயா மீது தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் (பிலிம்சேம்பர்) மலேசியா பாண்டியன் முறைப்பாடு ஒன்றையும் செய்துள்ளார்.

இதுபற்றி நடிகை ஸ்ரேயாவிடம் கேட்டபோது, 'போக்கிரி ராஜா (மலையாள) படம் தொடர்பாக எனக்கும், தோமஸ் அன்டணிக்கும் இடையேதான் ஒப்பந்தம் இருக்கிறது. மலேசியா பாண்டியன் யார் என்றே எனக்கு தெரியாது. அவருடன் நான் ஒப்பந்தம் செய்து கொள்ளவில்லை. அப்படி அவர் யார் என்றே தெரியாத நிலையில், என் மீது அவர் வழக்கு தொடருவதாக மிரட்டுவதா? இதற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்' என்று ஆவேசப்பட்டுள்ளார் ஸ்ரேயா.


You May Also Like

  Comments - 0

  • sa Monday, 19 March 2012 09:26 PM

    தேவையா இது?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X