2025 மே 20, செவ்வாய்க்கிழமை

படப்பிடிப்பில் மயங்கி விழுந்த குட்டி ஐஸ்...

Menaka Mookandi   / 2012 மார்ச் 28 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


நடிகை ஐஸ்வர்யா ராயின் க்ளோனிங் மாதிரி தெரியும் தோனி திரைப்பட கதாநாயகி ராதிகா ஆப்தேவுக்கு இப்போது தமிழில் நிறைய வாய்ப்புக்கள் குவிந்தவண்ணம் உள்ளன. அவற்றில் ஒன்று 'வெற்றிச் செல்வன்'. இந்தத் திரைப்படத்தில் நடிகர் அஸ்மலுக்கு ஜோடியாக நடிக்கிறார் ராதிகா ஆப்தே.

'வெற்றிசெல்வன்' படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற்று வருகின்ற நிலையில், படப்பிடிப்பு நிலையத்தில் மயங்கி விழுந்துள்ளார் ராதிகா. ஊட்டியில் கடும் குளிர் நிலவி வருகின்ற நிலையில், ராதிகாவுக்கு திடீர் வலிப்பு ஏற்பட்டே அவர் மயங்கி விழுந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. இதனால் படப்பிடிப்பு குழுவினர் அதிர்ச்சியான நிலையில் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து படப்பிடிப்பு சில மணி நேரங்கள் ரத்து செய்யப்பட்டது. பின்னர் நினைவு திரும்பி சகஜ நிலைக்கு வந்த ராதிகா ஆப்தே கூறும்போது, ஊட்டியில் இவ்வளவு குளிர் இருக்கும் என நினைக்கவில்லை. இரவு படப்பிடிப்பில் இன்னும் அதிக பனி பெய்ததால் தாக்குப்பிடிக்க முடியாமல் மயங்கி விழுந்து விட்டேன்,' என்று கூறியுள்ளார்.



You May Also Like

  Comments - 0

  • imaigal Friday, 30 March 2012 06:52 PM

    ஐஸ்வர்யாவை கண்டதில்லையா ??? கிட்ட கூட எடுக்க முடியாது இவரை!!!!! நயன்தார என்று ஓரளவுக்கு சொல்லலாம் !!!!!

    Reply : 0       0

    azzuhoor Sunday, 01 April 2012 08:56 AM

    நயன் தாராவை கண்டதில்லையா?

    Reply : 0       0

    சிறாஜ் Tuesday, 03 April 2012 08:13 PM

    ஹி ஹி ஹி நயந்தாராவைக்கண்டதில்லை அவர். அதுதான் அப்படி சொல்கிறார். ஆனால் ஐஸ்வர்யாவின் சாயல் இருக்கிறது. ஏன்னா நான் ஐஸ்வர்யாவை நல்லா கண்டிருக்கேன்.

    Reply : 0       0

    maheswaran Thilipan Wednesday, 04 April 2012 02:01 PM

    உங்களுக்கு வேலை இல்லையா? போய் அத பாருங்க.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X