2025 மே 20, செவ்வாய்க்கிழமை

தோள் சாய நட்பு தேடும் பிரபுதேவா...

Menaka Mookandi   / 2012 ஏப்ரல் 04 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


'இக்காட்டான சூழ்நிலைகளின் போது தோளில் சாய்வதற்கு ஒரு நட்பு வேண்டும். அந்த நட்பு ஒரு பெண்ணுடன்தான் இருக்க வேண்டும் என்று அர்த்தமில்லை. நான் இப்போது தனியாகவே உள்ளேன்' என்று பிரபு தேவா தெரிவித்துள்ளார்.

நயன்தாரா - பிரபுதேவா காதல் முறிந்துவிட்டது. இதுவரை பத்திரிகைச் செய்தியாக மாத்திரமே வந்துகொண்டிருந்த இந்த தகவலை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார் நயன்தாரா.

'பிரபுதேவாவுக்காக சிலவற்றை விட்டுக்கொடுத்தேன். அவருக்கு நான் 100 சதவீதம் உண்மையாகவே இருந்தேன். ஆனால் பிரபு தேவா அப்படி இருக்கவில்லை. அதனால் திருமணம் வரை சென்ற எங்கள் காதல் தற்போது முறிந்து விட்டது. பிரபு தேவா எனக்கு துரோகம் செய்துவிட்டார்' என்று பேட்டியளித்துள்ளார் நயன்தாரா.

அவரது இந்தக் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ளார் பிரபுதேவா. இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, 'என்னைப்பற்றி நிறைய செய்திகள் வெளிவருகின்றன. நான் எதையும் பாராதது போல, கேளாதபோல் இருக்கிறேன்.

எது உண்மை? எது பொய்? என்பது எனக்கு தெரியும். என் நண்பர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதுதான் முக்கியம். வெளிப்படையாக இந்த வதந்திகளுக்கு என்னால் பதில் சொல்லமுடியும். ஆனால் சிலர் மனங்கள் காயப்படும் என்பதால் அப்படி செய்யவில்லை. இப்போது நான் தனியாகத்தான் இருக்கிறேன்.

நடந்த விஷயங்கள் பற்றி நான் பேச விரும்பவில்லை. அவை என் சொந்த விஷயங்கள். காதல் பற்றி நான் எது சொன்னாலும் அது செய்தியாகிவிடுகிறது. இந்த விஷயங்களை வெளிப்படையாக பேசாததற்காக எனது ரசிகர்கள் என்னை மன்னிப்பார்கள் என்று நம்புகிறேன்' என்று கூறியுள்ளார் பிரபு தேவா.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X