2025 மே 20, செவ்வாய்க்கிழமை

சிம்புவுடன் நடிக்க நயனின் நிபந்தனைகள்

Menaka Mookandi   / 2012 ஏப்ரல் 05 , மு.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


நடிகர் சிலம்பரசன் நடிக்கவுள்ள 'வாலு' திரைப்படத்தின் கதாநாயகியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்படவுள்ளார். இருப்பினும் சிம்புவுடன் தான் நடிக்க வேண்டுமாயின் 3 நிபந்தனைகளுக்கு சம்மதம் தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளாராம் நயன்தாரா. 

என்னுடைய திரைப்படங்களில் நயன்தாரா நடிக்கிறார் என்று செய்தி போட வேண்டாம் என்று நடிகர் சிலம்பரசன் தமிழ்நாட்டு செய்தியாளர்களிடம் கோரிக்கை விடுத்து வருகின்ற அதேவேளை, இன்னொருபுறம், தன்னுடைய அடுத்த திரைபடத்தின் நாயகியாக நடிக்க விருப்பமா என்று நயன்தாராவிடம் தூது விட்டும் வருகிறாராம்.

இந்தச் செய்தியை நயன்தாராவே வெளிப்படையாக்கியுள்ளார். ஆம், சிம்பு நடிக்கவுள்ள 'வாலு' திரைப்படத்தில் நயன்தாராவை கதாநாயகியாக நடிக்க வைக்கவுள்ளார்களாம்.  நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் சிம்புவுடன் நடிக்க தனக்கு சம்மதம் என்று கூறியுள்ள நயன்தாரா, அதற்கு மூன்று நிபந்தனைகளையும் விதித்துள்ளாராம்.

தென் இந்தியாவில் எந்தவொரு கதாநாயகியும் வாங்காத அளவுக்கு 3 கோடி ரூபா சம்பளம் கொடுக்கப்பட வேண்டும். நடிப்பு தொடர்பான விஷயம் தவிர தனிப்பட்ட முறையில் என்னுடன் சிம்பு நெருங்கி பழகவோ பேசவோ முயற்சிக்கக்கூடாது.

முக்கியமாக எனது கெரவன் (ஆடை மாற்றும் வாகனம்) பக்கமே சிம்பு வரக்கூடாது போன்றவைதான் நயன்தாரா விதித்துள்ள நிபந்தனைகளாம். இப்படியான நிபந்தனைகள் விதிப்பதற்கு பதிலாக நடிக்கமாட்டேன் என்று சொல்லிவிடலாமே என்று கிண்டலடித்தாராம் தயாரிப்பாளர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X