2025 மே 20, செவ்வாய்க்கிழமை

அமலாவை ஓரங்கட்டிய இலியானா...

Menaka Mookandi   / 2012 ஏப்ரல் 07 , பி.ப. 01:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


மாதவன், ஆர்யா, சமீரா ரெட்டி மற்றும் அமலா போல் ஆகியோரின் நடிப்பில் பொங்கல் வெளியீடாக வெளிவந்து அனைவர் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் வேட்டை. லிங்குசாமியின் இயக்கத்தில் வெளியான இத்திரைப்படத்தை இந்தியிலும் இயக்கவுள்ளாராம் அவர். 

பிரதான கதாபாத்திரங்களுக்கான தேடல் ஓரளவு முடிவடைந்துள்ள நிலையில், அமலா போலின் கதாபாத்திரத்துக்கு மாத்திரம் சர்ச்சை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமலா போலுக்கு பதிலாக இந்தியில் இலியானாவை நடிக்க வைப்பதற்கான பேச்சுக்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில் அதற்கு இலியானா, சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

யூரீவி மோஷன் பிக்ஷர்ஸ் தயாரிப்பில் எதிர்வரும் மே மாதம் முதல் வாரத்தில் 'வேட்டை' ஹிந்தி படப்பிடிப்புக்கள் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாதவனின் கதாபாத்திரத்தில் அலி ஸப்பார் நடிக்கவுள்ளார். ஆரம்பத்தில் இந்தி வேட்டையிலும் மாதவனையே நடிக்க வைக்க லிங்குசாமி அவரை அணுகியுள்ளார். இருப்பினும், மாதவனின் முழங்காலில் அடிபட்டு அவர் ஆறு மாத ஓய்வில் இருப்பதால் அவரது கதாபாத்திரத்துக்கு அலி ஸப்பார் தெரிவாகியுள்ளார்.

இதேவேளை, ஆர்யாவின் கதாபாத்திரத்துக்கு ஷஹீட் கப்பூர் தெரிவாகியுள்ளார். சமீரா ரெட்டி அவரது கதாபாத்திரத்தை இந்தியிலும் மேற்கொள்ளவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. 






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X