2025 மே 20, செவ்வாய்க்கிழமை

ரஜினிக்காக காத்திருக்கும் அஜித்...

Menaka Mookandi   / 2012 ஏப்ரல் 09 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


சக்ரி டோலட்டி இயக்கத்தில் இன் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் திரைப்படம் பில்லா 2. தல அஜீத், பார்வதி ஓமனக்குட்டன் நடிப்பில் தயாராகிக்கொண்டிருக்கும் இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும் இந்த இசை வெளியீட்டுக்கு விழாவுக்கு இன்னமும் திகதி குறிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. இதனால் அஜீத் ரசிகர்கள் பாரிய குழப்பத்தில் உள்ளார்கள்.

இந்தத் திரைப்படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, தன் பணிகளை எப்போதோ முடித்துக் கொடுத்துவிட்டாராம். படம் மே மாதம் இரண்டாம் வாரத்தில் வெளிவரும் என்று கூறி வந்தவர்கள், இப்போது இன்னும் தாமதமாகும் என்று அறிவித்துள்ளனர்.

திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடந்தாலும் சரி, எளிமையாக நடந்தாலும் சரி, அது ரஜினியின் தலைமையில்தான் நடக்க வேண்டும் என்பதில் அஜீத் பிடிவாதமாக உள்ளாராம்.

இன்னொரு பக்கம், மங்காத்தா வெற்றியில் திளைக்கும் அஜீத் ரசிகர்கள், அந்த சூடு தனியும் முன்னரே பில்லா 2 வர வேண்டம் என்று பாரிய எதிர்ப்பார்ப்பில் காத்திருக்கிறார்களாம். இந்நிலையில், ஜூன் 2ஆம் வாரத்தில் ஒருவேளை பில்லா 2 திரைப்படம் வெளியாகலாம் என தயாரிப்பாளர் தரப்பில் கூறிவருகின்றனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X