2025 மே 20, செவ்வாய்க்கிழமை

திரையுலகிலிருந்து கண்ணீருடன் விடைபெற்ற த்ரிஷா...

Menaka Mookandi   / 2012 ஏப்ரல் 09 , பி.ப. 02:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஜுனியர் என்.டி.ஆர், த்ரிஷா நடிப்பில் விரைவில் வெளிவரவுள்ள தெலுங்கு திரைப்படம் 'தம்மு'. இந்தத் திரைப்படத்துக்கான படப்பிடிப்புக்கள் தற்போது நிறைவடைந்துள்ளன. தம்முவின் இறுதி நாள் படப்பிடிப்பை அடுத்து அத்திரைப்படத்தின் இயக்குனர் காலில் விழுந்து கண்ணீருடன் ஆசி பெற்றுக்கொண்டாராம் நடிகை த்ரிஷா.

எதற்காக இவர் கண்ணீருடன் ஆசி பெற்றுக்கொண்டார் என்று பார்க்கிறீர்களா? 'இனி திரைப்படம் நடிக்கப்போவதில்லை. இன்றுடன் விடைபெறுகிறேன்' என்று கூறிவிட்டு கண்ணீருடனேயே அங்கிருந்து விடைபெற்றுச் சென்றார் த்ரிஷா... என்று தெலுங்கு தேச ஊடகங்கள் பரபரப்பான செய்தியை வெளியிட்டுள்ளன.

கடந்த இரண்டு நாட்களாக எங்கு பார்த்தாலும் த்ரிஷா அழுதார்... கண்ணீர் விட்டார் என்றெல்லாம் செய்திகள் வெளியாகிக்கொண்டுள்ளன. த்ரிஷாவும் அவர் அம்மாவும் போடும் கல்யாண நாடகத்தினால் வந்த கண்ணீரோ என்று அனைவரும் கேள்வி எழுப்பிக்கொண்டிருந்த நிலையிலேயே இந்த அதிர்ச்சித் தகவல் த்ரிஷா ரசிகர்களை கதிகளங்க வைத்துள்ளது. 

த்ரிஷா தற்போது தமிழில் 'சமரன்' திரைப்படத்தில் மட்டும்தான் நடித்துக் கொண்டிருக்கிறாராம். தெலுங்கில் தான் நடித்துக்கொண்டிருந்த தம்மு திரைப்படத்தை அடுத்தே இந்த அறிவிப்பை விடுத்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது. சமரனுக்கு பிறகும் இவ்வாறான அறிவிப்பு வருகிறதா என்று பொறுத்திருந்து பார்ப்போம்...




You May Also Like

  Comments - 0

  • J. Arun Saturday, 14 April 2012 05:09 PM

    ஏன் இந்த அவசர முடிவு..

    Reply : 0       0

    Rana Monday, 16 April 2012 07:05 PM

    இவர் இல்லாட்டி சினிமா மூழ்கியா போகப் போகுது?????

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X