2025 மே 20, செவ்வாய்க்கிழமை

விலை மாதர்க்காக சங்கம் ஆரம்பிக்கும் ஸ்ரேயா...

Menaka Mookandi   / 2012 ஏப்ரல் 10 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


விலைமாது கதாபாத்திரத்தில் நடிப்பது, அதனையே தொழிலாகக் கொண்டுள்ள பெண்களின் மறுவாழ்வுக்காக உதவுதல் போன்ற நடவடிக்கைகளில் இந்திய நடிகைகள் அதிக நாட்டம் காட்டி வருகின்றனர்.

மும்பையில் இதனை பெரிய சமூகப் பணியாக சத்தமின்றி செய்து வரும் பல முன்னணி நடிகைகளும் உள்ளனர். இது தவிர்ந்த சமூக நலப் பணிகள், பிராணிகள் பாதுகாப்பு போன்றவற்றிலும் நடிகைகள் அக்கறை காட்டுகின்றமை புதிதான விடயமல்ல.

இந்நிலையில், விபசாரத்தைத் தொழிலாக மேற்கொண்டுள்ள பெண்களின் மறுவாழ்வுக்காகவும் அவர்களுக்கு உதவுவதற்காகவும் புதிய சங்கம் ஒன்றைத் ஆரம்பிக்கவுள்ளார் நடிகை ஸ்ரேயா.

ஸ்ரேயாவுக்கும் இவ்வாறான சேவைகளில் நாட்டம் அதிகம். ஏழைகளுக்கு விளம்பரம் இல்லாமல் உதவி வருகிறார். அத்துடன் ஆசிரமங்களுக்கு சென்று தியானம், யோகா போன்றவற்றில் ஈடுபடுகிறார்.

விபசாரத்தை தொழிலாகக் கொண்டு வாழும் பெண்களின் வாழ்க்கை போராட்டங்கள் ஸ்ரேயாவை மிகவும் பாதித்துவிட்டதாகவும் அதனால் வறுமை காரணமாக விபசாரத்தில் ஈடுபடும் பெண்கள் மற்றும் சினிமா ஆசையால் இத்தொழிலுக்கு தள்ளப்படும் பெண்களுக்கு உதவ தனி அமைப்பை ஆரம்பிக்கப்போவதாக அவர் கூறியுள்ளார்.

பாலியல் தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது, வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தி கொடுப்பது, திருமணம் செய்து வைப்பது, குழந்தைகளை படிக்க வைப்பது போன்ற பணிகளை இந்த அமைப்பு மூலம் செய்யவும் திட்டமிட்டுள்ளாராம் ஸ்ரேயா.







You May Also Like

  Comments - 0

  • irshath Monday, 14 May 2012 05:48 PM

    niceya

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X