2025 மே 20, செவ்வாய்க்கிழமை

கொள்கை தவறிய கமல்...

Menaka Mookandi   / 2012 ஏப்ரல் 12 , மு.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


இந்திய நடிகர், நடிகைகள் பலர் நடிக்க வந்த ஒரு சில ஆண்டுகளில் விளம்பரப் படங்களில் நடித்து பெரும் வருவாயினைப் பெற்று வருகின்றனர். ஆனால் தமிழ் நடிகர்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் ஆகியோர் மாத்திரம் எந்தவொரு விளம்பர படங்களையும் ஒப்புக்கொள்ளாமல் இருந்தனர்.

தாங்கள் இத்தகைய விளம்பரங்களில் நடிப்பதால், ரசிகர்களை தவறாக திசை திருப்பவது போல் ஆகிவிடும் என்ற காரணத்தால் இத்தகைய முடிவை ஒரு கொள்கையாகவே மேற்கொண்டிருந்தனர்.

கமல் தற்போது தனது முடிவை மாற்றிக்கொண்டு விளம்பரப் படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளாராம். 50 ஆண்டுகளாக கமல் சினிமாவில் இருக்கிறார். இதுவரை அவர் விளம்பரங்களில் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது முதல் தடவையாக விளம்பர படங்களில் நடிக்க மும்பை நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் செய்துள்ளார். இந்த நிறுவனம் மூலம் எற்கனவே இந்தி நடிகர்களான  அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், ஷாருக்கான், கரீனா கபூர், பிரியங்கா சோப்ரா போன்றோர் விளம்பர படங்களில் நடித்துள்ளனர்.

சினிமா வாழ்க்கையில் முதல் தடவையாக இந்த முயற்சியில் இறங்குவதாக கமல் தெரிவித்துள்ளார். சமூக சேவையில் அக்கறையுள்ள விளம்பர படங்களுக்கு முன்னுரிமை கொடுத்து நடிக்கப் போவதாக அவர் அறிவித்துள்ளார்.

எலயன்ஸ் மீடியா என்ற நிறுவனம்தான் கமலை வைத்து விளம்பரங்களை எடுக்கப் போகிறது. இந்த நிறுவனம்தான் அமிதாப், ஷாரூக், சயிப் அலிகான், கரீனா என பல பிரபலங்களையும் ஒப்பந்தம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.




You May Also Like

  Comments - 0

  • J. Arun Saturday, 14 April 2012 04:58 PM

    இதில் என்ன தவறு... அவர் ஒரு சிறந்த நடிகர். திரைபடத்தில் நடித்தாலும் விளம்பரத்தில் நடித்தாலும் கவலை பட தேவையில்லை.. அவர் என்றும் உலக நாயகன் தான்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X