2025 மே 20, செவ்வாய்க்கிழமை

ஐஸை மிஞ்சிய பிரியங்கா...

Menaka Mookandi   / 2012 ஏப்ரல் 14 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


உலக அழகி மாத்திரமல்ல, இதுவரை காலமும் இந்திய நடிகைகளில் அதிகம் சம்பளம் வாங்கியவர் என்ற முதலிடத்தையும் பெற்றிருந்தவர் ஐஸ்வர்யா ராய். எந்திரன் திரைப்படத்துக்காக ஐஸ்வர்யா ராய்க்கு வழங்கப்பட்ட 6 கோடி ரூபா சம்பளமே, இதுவரையில் இந்திய நடிகையொருவர் பெற்ற அதிகப்படியான சம்பளமாகும். தற்போது அவரையும் மிஞ்சிவிட்டார் நடிகை பிரியங்கா சோப்ரா.

இதுவரை எந்தவொரு நடிகையும் பெற்றுக்கொள்ளாதளவு பெரிய தொகையொன்றை சம்பளமாகப் பெற ஒப்பந்தமாகியுள்ளாராம் பிரியங்கா. அவருக்காக பேசப்பட்ட சம்பளத் தொகை எவ்வளவு தெரியுமா...? 9 கோடியாம். இதன் மூலம் இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகியுள்ளார் ப்ரியங்கா.

தமிழ் சினிமாவில் விஜய் ஜோடியாக 'தமிழன்' திரைப்படத்தில் நடித்தவர் பிரியங்கா சோப்ரா. பொலிவூட்டின் முதல் நிலை நாயகி இவரே. புதிதாக நடிக்க உள்ள 'ஜன்ஜீர்' இந்திப் படத்துக்கு ரூ.9 கோடி சம்பளத்தில் அவரை ஒப்பந்தம் செய்துள்ளனர். இதன் மூலம் இந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

இந்தி முன்னணி நடிகைகளான கத்ரீனா கைப், கரீனா கபூர், தீபிகா படுகோனே போன்றோர் சராசரியாக ரூ 2.5 கோடி முதல் ரூ.4 கோடி வரை சம்பளம் பெறுகின்றனர். பிரியங்காவும் இதுவரை இவர்கள் வாங்கும் சம்பளத்தைதான் பெற்று வந்தார். இந்நிலையிலேயே அவருக்கு இந்த அதிர்ஷ்டக் காற்று வீசியுள்ளது என இந்திய திரையுலகம் தெரிவிக்கின்றது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X