2025 மே 20, செவ்வாய்க்கிழமை

மரியானாகும் தனுஷ்...

Menaka Mookandi   / 2012 ஏப்ரல் 17 , பி.ப. 01:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


இந்திய தேசிய விருது நாயகன் தனுஷின் புதிய திரைப்படம் தொடர்பான தகவல்களை அவரே, தனது ட்விட்டர் இணையத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தனுஷ் - சுருதிஹாசன் இணைந்து நடித்து வெளியான '3' திரைப்படம் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் நிலையிலேயே தனது அடுத்த நகர்வு தொடர்பான தகவல்களை அவர் வெளியிட்டுள்ளார்.

வந்தே மாதரம் பாடலை இயக்கிய பாரத்பாலா இயக்கத்தில் 'மரியான்' என்ற திரைப்படத்தில் தனுஷ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். புதுமுக இயக்குனர்களின் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ஆறாவது திரைப்படம் இதுவெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அவர் மிகவும் சந்தோஷமாக தெரிவித்துள்ள மற்றொரு செய்தியும் உண்டு. அது, இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார் என்பதுதான்.



You May Also Like

  Comments - 0

  • fajil Friday, 18 May 2012 06:41 PM

    போ நீ போ ,மேலே போ

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X