2025 மே 20, செவ்வாய்க்கிழமை

நயனுக்கு பதிலடி கொடுக்க காத்திருக்கும் த்ரிஷா...

Menaka Mookandi   / 2012 ஏப்ரல் 18 , மு.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


உத்தியோக ரீதியில் மாத்திரம் போட்டியாகக் கருதிய நடிகை நயன்தாராவை, தற்போது தனிப்பட்ட ரீதியிலும் போட்டியிட்டு வெற்றிபெரும் நோக்கத்தில் காணப்படுகிறாராம் நடிகை த்ரிஷா. ஆம், சமயம் பார்த்து நயன்தாராவுக்கு பதிலடி கொடுக்கக் காத்திருக்கிராறாம் த்ரிஷா.

தமிழ், தெலுங்கு சினிமாவில் நயன்தாரா - த்ரிஷா இடையிலான போட்டா போட்டி குறித்து அவர்களுடைய ரசிகர்களுக்கு புதிதாகச் சொல்வதற்கு எதுவும் இல்லை. ஒருவர் வாய்ப்பை மற்றையவர் தட்டிப் பறிப்பதில் இருவருமே கொஞ்சமும் சளைத்தவர்கள் அல்ல என்று பலமுறை நிரூபித்துள்ளனர்.

கடந்த 10 ஆண்டுகளாக இருக்கும் இந்தப் போட்டி இப்போதும் தொடர்வது குறிப்பிடத்தக்கது. ஆனால் அது இப்போது, தனிப்பட்ட வாழ்க்கையிலும் போட்டியாகியுள்ளமை தான் புதிய விடயமாகிறது.

சம்பள விடயத்தில் நடிகை த்ரிஷாவை விட 20 இலட்சம் ரூபா அதிகமாகப் பெற்று முன்னிலை வகிக்கின்றார் நயன்தாரா.

நயன்தாரா நடிப்பதாக பேசிக் கொண்டிருந்த திரைப்படங்கள் திரிஷாவுக்கும் த்ரிஷா நடிப்பதாக அறிவிக்கப்பட்ட திரைப்படங்கள் நயன்தாராவுக்கும் கை மாறிப் போனமை  நினைவிருக்கலாம்.

'குருவி' திரைப்படத்தில் விஜய் ஜோடியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் கடைசி நேரத்தில் அவரை மாற்றி விட்டு த்ரிஷாவை ஒப்பந்தம் செய்தனர். இந்த திரைப்படத்துக்காக வாங்கிய முற்பணத்தையும் மிகவும் சளிப்போடு திருப்பிக் கொடுத்திருந்தார் நயன்தாரா.

இதுபோல் 'சத்யம்' திரைப்படத்தில் விஷால் ஜோடியாக நடிக்க த்ரிஷாவை முடிவு செய்தனர். ஆனால் கடைசி நேரம் நயன்தாரா அப்படத்தை தட்டி பறித்துக்கொண்டார்.  இவை மாத்திரமல்ல, திரைப்படங்களில் மட்டுமல்லாமல் விளம்பர வாய்ப்புகளிலும் இப்படித்தான்.

சென்னையில் உள்ள பிரபல ஆடைக் கடையொன்றில் சேலை விளம்பரத்துக்கு நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டார். அதே கடையில் த்ரிஷா விளம்பர தூதுவராக உள்ளார். இந்நிலையில், இருவருக்கும் இடையே யாருக்கு அதிக விளம்பர போர்டுகள் வைப்பது என்பதில் மோதல் நடக்கிறதாம்.

இவ்வாறான போட்டிகள் ஒருபுறம் இருக்க, இவ்விரு நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கை விவகாரங்களிலும் தற்போது போட்டி நிலவுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அண்மையில் நயன்தாராவின் முன்னாள் காதலரான பிரபுதேவாவுடன் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படமொன்றை தனது டுவிட்டரில் த்ரிஷா வெளியிட்டார்.

இதைப் பார்த்துவிட்டு நயன்தாரா சும்மா இருப்பாரா...? இதற்கு பதில் தரும் விதத்தில் ஹைதராபாத்தில் நடந்த விழா ஒன்றில் த்ரிஷாவின் நெருங்கிய நண்பரான நடிகர் டகுபதி ராணாவுடன் நெருக்கமாக அமர்ந்து சிரித்து சிரித்து பேச, அதை அப்படியே ஆந்திர தொலைக்காட்சிகள் நேரடி ஒளிபரப்பு செய்துவிட்டன.

இதனால் மிகவும் கடுப்பாகியுள்ள த்ரிஷா, நயன்தாராவுக்கு எப்படி பதிலடி கொடுக்கலாம் என தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கிறாராம்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X