2025 மே 20, செவ்வாய்க்கிழமை

இலங்கை அகதியாக அஜித்...

Menaka Mookandi   / 2012 ஏப்ரல் 19 , மு.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


அஜீத் குமாரின் நடிப்பில் தயாராகிக்கொண்டுள்ள திரைப்படம் பில்லா 2. இதில் இலங்கை அகதியொருவர் கதாபாத்திரத்தில் அஜீத் நடித்துள்ளாராம். கதாநாயகனின் கடந்த கால வாழ்க்கையைச் சித்தரிக்கும் வகையில் இந்த கதாபாத்திரம் அமைக்கப்பட்டுள்ளதாம். இருப்பினும் அக்கதாபாத்திரம் மிகவும் குறுகிய நேரத்தில் முடிந்துவிடும் வகையிலேயே அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொதுவாக இதுபோன்ற கதாபாத்திரங்களை ஏற்கும் போது பல நிகழ்கால சங்கடங்களையும் சந்திக்க வேண்டியிருக்கும். கூடுமானவரை சர்ச்சைகளை தவிர்ப்பது நல்லது என்று நினைக்க ஆரம்பித்திருக்கிறார் அஜீத்.

அதன் காரணமாக அஜீத் அகதி என்ற தகவல் திரைப்படத்தில் இருக்குமா? என்றெல்லாம் கேள்விகள் எழுந்துள்ளன. ஆனால் பில்லா 2 தரப்பிலும் இது குறித்த அச்சம் இருக்கிறதோ என்னவோ? அவர் இந்த திரைப்படத்தில் அகதியாக நடிக்கவில்லை என்று கூற ஆரம்பித்திருக்கிறார்களாம்...


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X