2026 மே 01, வெள்ளிக்கிழமை

ரவியின் பூலோக நாயகி...

Menaka Mookandi   / 2012 ஏப்ரல் 20 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஜெயம் ரவியின் அடுத்த திரைப்படமான பூலோகத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரபுதேவாவைப் பிரிந்த பிறகு நயன்தாராவுக்கு வாய்ப்புகள் கூரையைப் பிய்த்துக் கொண்டு வருகின்றன. இந்நிலையில் புதுமுக இயக்குனரின் பூலோகம் திரைப்படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நடிக்க நயன்தாராவைக் கேட்டார்களாம். கதையைக் கேட்ட அவர் எனக்கு கதை மிகவும் பிடித்திருக்கிறது என்று கூறியுள்ளார்.

இதையடுத்து இந்த திரைப்படத்தில் நயனை நடிக்க வைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், இன்னும் ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை என்றும் கூறப்படுகிறது.

ஜெயம் ரவி குத்துச் சண்டை வீரராக நடிக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புக்கள் எதிர்வரும் மே மாதம் ஆரம்பமாகவுள்ளன. இதில் நயன் தான் ஹீரோயினா என்பது விரைவில் தெரிய வரும்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .