2025 மே 20, செவ்வாய்க்கிழமை

தமன்னாவின் மழைக் குளியலை எவரும் பார்க்கக் கூடாது...!

Menaka Mookandi   / 2012 ஏப்ரல் 23 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


'பையா' திரைப்படத்தில் நடிகர் கார்த்தியுடன் இணைந்து 'அடடா மழைடா...' பாடலுக்கு நடிகை தமன்னா ஆடிய நடனத்தை எளிதில் எவரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. சிறுவர் முதல் பெரியவர் வரை அப்பாடலையம் பாடல் காட்சிகளையும் பார்த்து மகிழ்கின்றார்கள்.

அந்தளவுக்கு தமன்னாவின் மழைக் குளியல் எல்லோர் மனங்களிலும் பதிந்துவிட்டது. இருப்பினும் தமன்னாவை வைத்து அவ்வாறானதொரு மழைக்குளியலை காட்சிப்படுத்த வேண்டுமாயின் அதற்கு அவர் போடும் நிபந்தனைகளுக்கு இயக்குனர்கள் ஓகே சொல்ல வேண்டுமாம்.

'மழைக் காட்சிகளில் கவர்ச்சிகரமாக நனைந்து நடிக்க தயார். ஆனால் அதற்கு ஒரு நிபந்தனை உண்டு. அதாவது, மழைக் காட்சிகளை படமாக்கும்போது அங்கு பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டாம். இதற்கு ஒத்துக்கொண்டால், நான் அவ்வாறான காட்சியொன்றில் நடிக்கத் தயார்' என்று கூறியுள்ளாராம் தமன்னா.

நடிகை தமன்னாவுக்கு தமிழில் வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் அவர் தெலுங்கில் கை நிறைய வாய்ப்புக்களை வைத்துள்ளார். திரைப்படங்கள் தவிர விளம்பரங்களிலும் நடிக்கும் வாய்ப்புகளும் அதிகரித்துள்ளன. விளம்பரங்களில் அவர் எவ்வளவு பணம் கேட்டாலும் கொடுக்க முன்னணி நிறுவனங்கள் தயாராக உள்ளன. அதனால் அவர் மிகவும் சந்தோஷமாக உள்ளார்.

தமன்னாவுக்கும் மழைக்கும் அவ்வளவு ராசியாம். அவர் நடிக்கும் திரைப்படங்களில் ஒரு பாடலுக்காவது அவருக்கு வெள்ளை நிற ஆடையைக் கொடுத்து மழையில் ஆட்டம் போட வைக்கின்றனர். இதனாலேயே தமன்னா மேற்படி நிபந்தனையொன்றை விதித்துள்ளாராம்.







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X