2025 மே 20, செவ்வாய்க்கிழமை

திருமணத்தின் பின் வேகமான ரீமா...

Menaka Mookandi   / 2012 ஏப்ரல் 25 , மு.ப. 07:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


கடந்த மாதம் டெல்லி தொழிலதிபரை ஆடம்பரமாக திருமணம் முடித்த ரீமா சென் மீண்டும் நடிக்க வந்துவிட்டார் என்பதுதான் கொலிவூட்டின் புதிய செய்தி! இது அதிகாரப்பூர்வமானது என்றும் உறுதியாகியுள்ளது.

நடிகர் விஜய் தொடங்கியிருக்கும் சொந்த திரைப்பட நிறுவனமான கில்லி பிலிம்ஸ் தயாரிக்கும் முதல் திரைப்படம் 'சட்டம் ஒரு இருட்டறை' இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ரீமா சென்.

1981இல் வெளியாகி பெரும் திருப்பத்தை ஏற்படுத்திய அதே சட்டம் ஒரு இருட்டறைதான் இப்போது ரீமேக் செய்யப்படுகிறது.

இந்த திரைப்படத்தில் நடிப்பது குறித்து ரீமா சென் கூறுகையில், 'இந்தப் திரைப்படத்தின் இந்தி ரீமேக் அந்தா கானூனை நான் பார்த்திருக்கிறேன். அதில் ஹேமமாலினியின் கதாபாத்திரம் மிகவும் பிடிக்கும்.

அந்த கதாபாத்திரத்தைதான் இப்போது தமிழில் நான் செய்யப் போகிறேன் என்பதில் மிகவும் மகிழ்ச்சி. தொடர்ந்து திரைப்படங்களில் கவனம் செலுத்துவேன். முன்பை விட இன்னும் வேகமான ரீமாவை படத்தில் காணலாம்“ என்றார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X