2025 மே 20, செவ்வாய்க்கிழமை

அவன் இவனுக்காக விருது வென்ற விஷால்....

Menaka Mookandi   / 2012 ஏப்ரல் 30 , மு.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


தமிழ் சினிமாவுக்காக உலக அளவில் நடத்தப்படும் நோர்வே தமிழ் திரைப்பட விருது விழா - 2012, ஒஸ்லோ நகரில் நடைபெற்றது. இந்த விருது விழாவில் சிறந்த நடிகருக்கான சிறப்பு நடுவர் குழு விருதினை 'அவன் இவன்' திரைப்படத்துக்காக நடிகர் விஷால் பெற்றுள்ளார்.

அத்துடன், சிறந்த நடிகர் விருது 'போராளி' திரைப்படத்துக்காக எம்.சசிகுமாருக்கும் சிறந்த நடிகைக்கான விருது 'மயக்கம் என்ன?' திரைப்படத்துக்கான நடிகை ரிச்சா கங்கோபாத்யாய்வுக்கும் வழங்கப்பட்டுள்ளது. சிறந்த இசையமைப்பாளர் விருது அழகர்சாமியின் குதிரை திரைப்படத்துக்காக இசைஞானி இளையராஜாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இத்திரைப்பட விழாவில் இயக்குனர் சற்குணத்தின் 'வாகை சூடவா' திரைப்படம் மாத்திரம் 7 விருதுகளைத் தட்டிச்சென்றுள்ளது. அத்துடன், 'அழகர் சாமியின் குதிரை' திரைப்படம் நான்கு விருதுகளைத் தட்டிச்சென்றது.

இவ்விழாவில் வழங்கப்பட்ட விருதுகள் தொடர்பான முழு விபரங்கள் வருமாறு :-

சிறந்த திரைப்படம் - வாகை சூட வா
சிறந்த இயக்குனர் - சற்குணம் (வாகை சூட வா)
சிறந்த நடிகர் - ஸ்பெஷல் ஜூரி விருது - நடிகர் விஷால் (அவன் இவன்)
சிறந்த நடிகர் - எம்.சசிகுமார் (போராளி)
சிறந்த நடிகை - ரிச்சா கங்கோபாத்யாய் (மயக்கம் என்ன?)
சிறந்த இசையமைப்பாளர் - இளையராஜா (அழகர்சாமியின் குதிரை)
சிறந்த துணை நடிகர் - அப்புக்குட்டி (அழகர்சாமியின் குதிரை)
சிறந்த துணை நடிகை - தேவதர்ஷினி (மகான் கணக்கு)
சிறந்த கதை - புகழேந்தி தங்கராஜ் (உச்சிதனை முகர்ந்தால்)
சிறந்த திரைக்கதை- சுசீந்திரன் (அழகர்சாமியின் குதிரை)
சிறந்த ஒளிப்பதிவு - ரிச்சர்ட் எம்.நாதன் (கோ)
சிறந்த பாடலாசிரியர் - காசி ஆனந்தன் (உச்சிதனை முகர்ந்தால்)
சிறந்த தயாரிப்பு நிறுவனம் - எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் (அழகர்சாமியின் குதிரை)
சிறந்த வில்லன் - சம்பத் (வர்ணம் டூ ஆரண்ய காண்டம்)
சிறந்த நகைச்சுவை நடிகர் - கஞ்சா கருப்பு (போராளி)
சிறந்த நகைச்சுவை - சூரி (போராளி)
சிறந்த பின்னணி பாடகர் - சத்யா ('மாசமா...' எங்கேயும் எப்போதும்)
சிறந்த பின்னணி பாடகி - சின்மயி ('சர சர சாரக் காத்து...'- வாகை சூட வா)
சிறந்த நடனம் - பாபி (போறானே... - வாகை சூட வா)
சிறந்த ஸ்டன்ட் மாஸ்டர் - பீட்டர் ஹெய்ன் (கோ)
சிறந்த ஸ்டன்ட் நடிகர் - கணேஷ் பாபு (மகான் கணக்கு)
சிறந்த எடிட்டிங் - கோலா பாஸ்கர் (மயக்கம் என்ன)
சிறந்த கலை இயக்குநர் - சீனு (வாகை சூட வா)
சிறந்த பின்னணிக் குரல் - தீபா வெங்கட் (மயக்கம் என்ன)
சிறந்த புதுமுகம் - நீனிகா (உச்சிதனை முகர்ந்தால்)
சிறந்த மேக் அப் - கே.பி.சசிகுமார் (வாகை சூட வா)
சிறந்த உடை அலங்காரம் - நட்ராஜ் (வாகை சூட வா)
வாழ்நாள் சாதனையாளர் விருது - ரகுநாதன்
கலைச்சிகரம் விருது - சத்யராஜ்
நள்ளிரவுச் சூரியன் விருது - உச்சிதனை முகர்ந்தால்
தமிழ் பண்பாட்டை முன்னிறுத்தும் திரைப்படத்துக்கான சிறப்பு விருது கௌரவ் இயக்கிய 'தூங்கா நகரம்' திரைப்படத்துக்கு வழங்கப்பட்டது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X