2025 மே 20, செவ்வாய்க்கிழமை

குஷியாக உள்ளார் தப்ஸி...

Menaka Mookandi   / 2012 மே 04 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


டுவிட்டர் வலையமைப்பில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான பின்தொடர்வோரைக் கொண்டுள்ளதால் தான் மிகவும் குஷியாக உள்ளதாக தனுஷின் 'ஆடுகளம்' நாயகி தப்ஸி தெரிவித்துள்ளார்.

பலரால் விரும்பப்படுவது பெரிய விஷயம் என்று தெரிவித்துள்ள அவர், தனது டுவிட்டர் வலையமைப்பு பின்தொடர்வோருக்கு நன்றியையும் அறிவித்துள்ளார்.

தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷின் 'ஆடுகளம்' திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை தப்ஸி. ஆடுகளத்தை தொடர்ந்து அவர் நடித்த 'வந்தான் வென்றான்' திரைப்படம் பெரிதாக ஓடவில்லை. அதன் பிறகு அவர் தெலுங்கு திரையுலகுக்கு சென்றார்.

அங்கு படுகவர்ச்சியாக நடித்து வரும் அவர் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார். தனக்கு ஆந்திராவில் நல்ல மார்க்கெட் இருப்பதை உணர்ந்த அவர் அதை தக்க வைத்துக்கொள்ளும் முயற்சியில் உள்ளார்.

விளைவு தற்போது அவர் கையில் 3 தெலுங்கு திரைப்படங்கள் உள்ளன. இது தவிர்த்து தமிழில் 'மறந்தேன் மன்னித்தேன்' மற்றும் இந்தியில் ஒரு திரைப்படத்திலும் நடிக்கிறார்.

டுவிட்டரில் உள்ள தப்ஸியின் பின் தொடர்வோரின் எண்ணிக்கை 1 இலட்சத்தை தாண்டியுள்ளது. ஆனால் டோலிவூட் ராணி நடிகை இலியானாவுக்கு 1,28,000க்கும் அதிகமான பின்தொடர்வோர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.




You May Also Like

  Comments - 0

  • aroosin Sunday, 27 May 2012 10:18 AM

    என் பேவரிட் ஹீரோயின்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X