2025 மே 20, செவ்வாய்க்கிழமை

விஜய்க்கு எதிராக நடவடிக்கை...?

Menaka Mookandi   / 2012 மே 05 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


இந்திய மத்திய அரசின் சட்ட விதிகளை மீறி துப்பாக்கி திரைப்படத்தில் நடிகர் விஜய் புகைபிடிக்கும் காட்சியொன்று, சுவரொட்டிகள் மூலம் விளம்பரம் செய்யப்பட்டுள்ளதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இந்திய பசுமைத் தாயகம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து பசுமைத் தாயகத்தின் மாநில தலைவர் சௌம்யா அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'வீ கிரியேஷன்ஸ்' நிறுவனத்தின் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், நடிகர் விஜய் கதாநாயகனாக நடிக்கும் 'துப்பாக்கி' எனும் திரைப்படத்தின் விளம்பரம் சுவரொட்டிகள் மூலம் கடந்த முதலாம் திகதி சென்னை நகரில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.

'துப்பாக்கி' திரைப்படத்தின் இந்த விளம்பரத்தில் விஜய் புகைப்பிடிக்கும் காட்சி பெரிய அளவிலும், முதன்மையாகவும் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு புகைப்பிடிக்கும் காட்சி விளம்பரங்களில் இடம்பெற்றுள்ளமையானது இந்திய புகையிலை கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும்.

இந்திய மத்திய அரசு, தமிழக அரசு, மத்திய திரைப்பட தணிக்கைத்துறை, நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து அதிகார அமைப்புகளும் திரைப்படங்களில் புகைபிடிக்கும் காட்சிகளை கட்டுப்படுத்தும் மத்திய அரசாணையை செயல்படுத்துமாறு உத்தரவிட்டுள்ள நிலையில், விளம்பரங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகள் இடம்பெறுவது சட்டப்படி குற்றம் என்கிற உண்மையை அறிந்த பின்னரும், 'துப்பாக்கி' திரைப்பட தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தரும், இயக்குனரும், நடிகரும், 'துப்பாக்கி' திரைப்படத்தின் விளம்பரத்தில் புகைப்பிடிக்கும் காட்சியினை இடம்பெறச்செய்து சட்டத்தை அப்பட்டமாக மீறியுள்ளனர்.

எனவே இந்திய அரசின் புகையிலை கட்டுப்பாட்டு சட்டத்தினை மீறி, குற்றமிழைத்துள்ளவர்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தமிழக அரசை பசுமைத்தாயகம் அமைப்பின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்' என்று சௌம்யா அன்புமணி கூறியுள்ளார்.



You May Also Like

  Comments - 0

  • Nabeel Sunday, 03 June 2012 11:07 PM

    இது ரொம்ப ஓவரு.

    Reply : 0       0

    rilwan Monday, 03 September 2012 08:52 AM

    சூப்பர் தல

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X