2025 மே 20, செவ்வாய்க்கிழமை

விஷால் - சரத் மகள் காதலுக்கு பெற்றோல் ஊற்றிய குஷ்பு...

Menaka Mookandi   / 2012 ஜூன் 27 , மு.ப. 08:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


விஷாலுக்கும் நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமிக்கும் இடையில் காதல் என்று பேச்சு அடிபட்டுக்கொண்டிருக்கும் இத்தருணத்தில் அதில் பெட்றோல் ஊற்றுவதைப் போல் மற்றுமொரு செய்து உலா வருகின்றது.

இயக்குநர் சுந்தர் சியின் மனைவியும் நடிகையுமான குஷ்புவின் தயாரிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் திரைப்படம் மத கஜா ராஜா - எம்.ஜி.ஆர். இத்திரைப்படத்தின் கதாநாயகனாக விஷால் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

அவருக்கு ஜோடியாக கார்த்திகா, தப்ஸி ஆகியோர் தெரிவு செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது புதிதாக நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி தெரிவாகியுள்ளார். இது தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்பும் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்தின் கதாநாயகி மாறுவது இது மூன்றாவது முறையாகும். முதலில் இந்தப் திரைப்படத்துக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டவர் கார்த்திகா. ஆனால் கதையை மாற்றிவிட்டார்கள் என்று புகார் கூறிவிட்டு, திரைப்படத்திலிருந்து அவர் விலகிக் கொண்டார்.

அடுத்து தப்;ஸி ஒப்பந்தமானார். ஏனோ விஷாலுக்கு அவருடன் நடிப்பதில் விருப்பம் இல்லையாம். இந்த நிலையில்தான் தன் மனம் கவர்ந்த வரலட்சுமியையே அந்தத் திரைப்படத்தின் கதாநாயகியாக்;கிவிட்டார் விஷால்.

பல திறமைகளை வைத்துக் கொண்டு, கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கு மேல் தனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்காதா என்று காத்திருந்தவர் வரலட்சுமி. சிம்புவின் போடா போடியில் இவர் நடிக்க ஆரம்பித்திருந்தாலும், அந்தப்படம் இப்போதைக்கு வருவதாக தெரியவில்லை. எனவே மதகஜாராஜா - எம்ஜிஆர், வரலட்சுமிக்கு முதல் தமிழ்ப்படமாக அமையவிருக்கிறது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X