2025 மே 20, செவ்வாய்க்கிழமை

சிங்கத்தோடு இணைய ஆசைப்படும் சிறுத்தை...

Menaka Mookandi   / 2012 ஜூலை 02 , மு.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


'எனது அண்ணன் சூர்யாவுடன் இணைந்து நடிக்க ஆசை உள்ளது. அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. நல்ல கதையம்சமுள்ள திரைப்படம் கிடைத்தால் சேர்ந்து நடிப்போம் என்று கூறியுள்ளார் சகுனி கதாநாயகன் கார்த்தி.

இதேவேளை, 'எனது திரைப்படங்களைப் பார்த்து நடிகர் விக்ரம் என்னைப் பாராட்டியுள்ளார். அவரது பாராட்டு எனக்கு கிடைத்த கௌரவமாகவே கருதுகின்றேன். அத்துடன், அவர் என்னை அடுத்த சூப்பர் ஸ்டார் என்று கூறவில்லை. என் மீது அதிக நம்பிக்கை உள்ளதாகவே கூறியிருந்தார்' என்று விளக்கமளித்துள்ளார் கார்த்தி.

நடிகர் கார்த்தி நடித்து அண்மையில் வெளிவந்த திரைப்படம் சகுனி. இந்நிலையில், மதுரை திரையரங்குக்கு சென்று அங்கு ரசிகர்களைச் சந்தித்துள்ளார் கார்த்தி. அங்கு உரையாற்றியுள்ள அவர் கூறியுள்ளதாவது,

எங்களது சகுனி திரைப்படக் குழுவினருக்கு மதுரை ரசிகர்கள் பெரும் உற்சாக வரவேற்பு கொடுத்துள்ளனர். இதனால் நாங்கள் மேலும் உற்சாகம் அடைந்துள்ளோம். சகுனி திரைப்படத்தின் வெற்றி இது தான். இந்த வெற்றியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ளவே தமிழகத்தில் உள்ள பல்வேறு திரையரங்குகளுக்கு நேரடியாக சென்று வருகின்றேன்.

இந்த திரைப்படம் அனைத்து திரையரங்குகளிலும் வெற்றித் திரைப்படமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதற்காக திரைப்படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இது அரசியல் கலந்த நகைச்சுவைத் திரைப்படம். இதில் நான் புதுப்புது கதாபாத்திரங்களில் வந்து செல்வது தான் சிறப்பம்சம். இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

சகுனி திரைப்படத்தில் அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியை விமர்சித்து இருப்பதாக சிலர் கூறுவது தவறான தகவல். நான் அவர் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். சகுனி திரைப்படத்தில் எந்த இடத்திலும் ராகுல் காந்தியை விமர்சனம் செய்யும் காட்சியோ அல்லது வசனமோ இல்லை. அதேபோல எதிர்காலத்தில் அரசியலுக்கு வரும் எண்ணமும் எனக்கு இல்லை' என்று கூறியுள்ளார் கார்த்தி.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X