2025 மே 20, செவ்வாய்க்கிழமை

தெய்வப் பிறவியாக சூர்யா...

Menaka Mookandi   / 2012 ஜூலை 12 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


சூர்யா – காஜர் அகர்வால் நடிப்பில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வெளியாகவுள்ள திரைப்படம் 'மாற்றான்'. எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 15ஆம் திகதி இந்த திரைப்படத்தை வெளியிட ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில் இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் தாமதமாகி வருவதால் மாற்றான் வெளியீடு பிற்போடப்பட்டுள்ளது.

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிப்பில் ஹரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள 'மாற்றான்' திரைப்படத்தில் நடிகர் சூர்யா, ஒட்டிப் பிறந்த இரட்டைச் சகோதரர்களாக நடித்திருக்கிறார். 'இந்த கதாபாத்திரத்தின் மூலம் ஊனமுற்றவர்களை அவமானப்படுத்துவது போன்ற எந்தவொரு காட்சியும் அமைக்கப்படவில்லை. இதில் இரண்டு சூர்யாக்களையும் தெய்வப் பிறவிகளாகவே காட்டியிருக்கிறோம்' என்று மாற்றான் இயக்குனர் கே.வி.ஆனந்த் தெரிவித்துள்ளார்.

மாற்றான் திரைப்படம் தொடர்பான செய்தியாளர் மாநாடு நேற்று புதன்கிழமை இரவு நடைபெற்ற நிலையில் நடிகர் சூர்யா, இயக்குனர் கே.வி.ஆனந்த் ஆகியோர் கலந்துகொண்டனர். இதன்போது உரையாற்றிய சூர்யா,

'நான் நடிக்க வந்து 13 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் 'மாற்றான்' திரைப்படத்தில் நடித்தபோது தினமும் புது அனுபவமாக இருந்தது. இந்த திரைப்படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ். நிறுவனத்துக்கும் நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

2009ஆம் ஆண்டிலேயே இந்த திரைப்படத்தை ஆரம்பிப்பதாக இருந்தோம். சில காரணங்களால் கொஞ்சம் காலதாமதமாக ஆரம்பித்திருக்கிறோம். என்னை பொறுத்தவரை ஒவ்வொரு திரைப்படமும் ஒரு சவால். ஒவ்வொரு திரைப்படத்திலும் நடிக்கும்போதும், ரசிகர்களை திருப்திப்படுத்த முடியுமா? என்ற பயம் வரும்.

கே.வி.ஆனந்துக்கு, நான் நன்றி சொல்லவேண்டும். இந்த திரைப்படத்தில் அவருடைய உழைப்பை வார்த்தைகளால் சொல்ல முடியாது. ஒவ்வொரு காட்சியையும் செதுக்கியிருக்கிறார்' என்றும் கூறினார்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் கே.வி.ஆனந்த், மாற்றான் திரைப்படமும், பிரியாமணி நடித்த 'சாருலதா' என்ற திரைப்படமும் ஒரே கதையா? என்று என்னிடம் கேட்கிறார்கள். அந்த திரைப்படத்துக்கும், இந்த திரைப்படத்துக்கும் கொஞ்சம்கூட சம்பந்தமில்லை. அது வேறு கதை. இது வேறு கதை' என்று கே.வி. ஆனந்த் கூறியுள்ளார்.




You May Also Like

  Comments - 0

  • Dragon Warrior Monday, 20 August 2012 06:00 AM

    ஹாலிவூட் இருக்க வரைக்கும் உங்களுக்கு கதை பஞ்சம் வராது ....

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X