2025 மே 20, செவ்வாய்க்கிழமை

விஜய், சூர்யாவை தவிக்கவிடும் காஜல்...

Menaka Mookandi   / 2012 ஜூலை 17 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


காஜல் அகர்வால் தற்போது தென்னிந்தியாவில் நம்பர் ஒவன் நாயகியாகத் திகழ்கின்றார். விஜய்யுடன் 'துப்பாக்கி' சூர்யாவுடன் 'மாற்றான்', இந்தியில் ஒரு திரைப்படம், தெலுங்கில் முன்னணி நாயகர்களுடன் இரண்டு திரைப்படங்கள் என தமிழ்நாடு, ஹைதராபாத், மும்பை என பறந்து பறந்து நடித்துக் கொண்டிருக்கிறார்.

ஆனால், விஜய், சூர்யா என தமிழ்த் திரையுலகின் முன்னணி நாயகர்களின் திரைப்படங்கள் தற்போது நடிகை காஜல் அகர்வாலின் திகதி ஒதுக்கீட்டு பிரச்சினை காரணமாக வெளியிடுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

'துப்பாக்கி' திரைப்படத்திற்காக விஜய்யுடன் காஜல் அகர்வால் நடிக்கும் இரண்டு பாடல்கள் இன்னமும் படமாக்கப்படவில்லை. அதேவேளை, 'மாற்றான்' திரைப்படத்திற்காக சூர்யாவுடன் ஒரு பாடல் படமாக்கப்பட வேண்டும்.

ஆனால் காஜல் அகர்வால் இதற்காக ஒதுக்கிக்கொடுத்த திகதிகளை அவர் சரியாகப் பயன்படுத்தவில்லை என்பதால் தற்போது மீண்டும் திகதிகள் கேட்டிருக்கிறார்கள்.

இருப்பினும் மேற்படி திரைப்படக் குழுவினர் கேட்டுள்ள திகதிகளை வேறு திரைப்படங்களுக்காக ஒதுக்கிக் கொடுத்துள்ளாராம் காஜல். இதனால் மேற்படி இரண்டு திரைப்படங்களினதும் படப்பிடிப்புக்கள் நிறைவு பெறாத நிலையில் சிக்கித் தவிக்கின்றனராம் திரைப்படக் குழுவினர்.

இதனால் திரைப்பட வெளியீட்டு திகதிகளும் தாமதமாகி வருகின்றன. 'துப்பாக்கி' தீபாவளிக்கு வெடிக்கும் என்று அறிவித்து இருக்கிறார் இயக்குனர் முருகதாஸ். காஜல் அகர்வாலின் திகதிகளைப் பொறுத்தே 'மாற்றான்' எப்போது வெளிவரும் என்பது தெரிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 





You May Also Like

  Comments - 0

  • Dragon Warrior Monday, 20 August 2012 06:03 AM

    விஜய் சூர்யா மட்டுமில்ல எங்களையும்தான் தவிக்க விடு...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X