2025 மே 20, செவ்வாய்க்கிழமை

தொப்பையை தொலைத்த அஜித்...

Menaka Mookandi   / 2012 ஜூலை 18 , பி.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


அடுத்த படத்துக்காக படு வேகமாகத் தயாராகி வருகிறார் நடிகர் அஜீத். இதற்காக அவர் கடுமையான உடற்பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். இப்போது அவர் முன்னிலும் ஸ்லிம்மாக, தொப்பையோ, மேலதிக சதையோ இல்லாமல் மாறியுள்ளார்.

அஜீத்தை விமர்சிப்பவர்கள் அவரது உடல் தோற்றத்தை விமர்சிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். இதுகுறித்து மிகுந்த வருத்தம் தெரிவித்திருந்த அஜீத், என் நடிப்பைப் பார்க்காமல், உடல் தோற்றத்தை கிண்டல் செய்வது சரியா எனக் கேட்டிருந்தார்.

ஆனால் இன்னொரு பக்கம், எந்த விமர்சனத்துக்கும் இடம்கொடுக்கக் கூடாது என நினைத்தாரோ என்னமோ, ஜிம்முக்குப் போய் தீவிர உடற்பயிற்சியில் இறங்கிவிட்டார்.

அடுத்து ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில், விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நயன்தாராவுடன் தான் நடிக்கும் திரைப்படத்துக்காகத்தான் இத்தனை பயிற்சிகளும் எடுத்து வருகின்றார்.

இந்த திரைப்படத்தில் முற்றிலும் ஸ்லிம்மான அஜீத்தை நீங்கள் பார்க்கலாம் என்று கூறியுள்ள இயக்குநர் விஷ்ணுவர்தன், அஜீத் ஜிம்மிலிருக்கும் இரு படங்களையும் வெளியிட்டுள்ளார்.

அந்தப் படங்களில் அஜீத்தின் உடல் ப்ளாட்டாக, ஃபிட்டாக உள்ளது. விமர்சகர்கள் கிண்டலடிக்கும் தொப்பை கூட போயே போச்சு. விட்டால் சிக்ஸ் பேக்குடன் வந்து நின்றாலும் நிற்பார் மனிதர். வெற்றியும் தோல்வியும் கலைஞர்களின் ஆர்வத்தை பாதிப்பதில்லை என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்.


You May Also Like

  Comments - 0

  • khan Thursday, 19 July 2012 08:00 PM

    என்ன இருந்தாலும் விஜய் போல வருமா?

    Reply : 0       0

    fars Saturday, 21 July 2012 06:53 AM

    லூசா உங்களுக்கு. யார ......... யாரோட ஒப்பிடனும்னு ஒரு விசஸ்த இல்ல......... சுறா முடிஞ்சி............. கருவாடு நடிக்கச் சொல்லு

    Reply : 0       0

    rajesh s Friday, 10 August 2012 11:03 PM

    தல தல தலதான்

    Reply : 0       0

    Dragon Warrior Monday, 20 August 2012 05:58 AM

    நானும் எவ்ளோ நாள்தான் தொப்பயோடையே நடிக்கிறது ??

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X