2025 மே 20, செவ்வாய்க்கிழமை

விக்ரமின் கண்கட்டி வித்தை...

Menaka Mookandi   / 2012 ஜூலை 24 , பி.ப. 01:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


நாயகனாக நடிக்கும் ஒவ்வொரு திரைப்படத்திற்காகவும் கடுமையாக தனது உடம்பை வருத்தி உழைப்பவர் நடிகர் விக்ரம். 'சேது', 'பிதாமகன்', 'அந்நியன்', 'காசி' என இவர் நடித்த பல்வேறு திரைப்படங்கள் இதற்கு சான்றாக இருக்கின்றன. தற்போத அவர் நடித்துக்டிகாண்டிருக்கும் 'தாண்டவம்' திரைப்படமும் இப்பட்டியலில் சேர்கிறது.

இந்த திரைப்படத்தில் விக்ரம் இருவேறு பரிமாணங்களில் நடித்து இருக்கிறார். 'தாண்டவம்' திரைப்படத்தில் கண் தெரியாதவராக ஒரு கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறாராம் விக்ரம்.

'காசி' திரைப்படம் போல் அல்லாமல் இந்த திரைப்படத்தில் வித்தியாசமாக தெரிய வேண்டும் என்று கஷ்டப்பட்டு இருக்கிறார். கண் தெரியாதவராக நடிப்பதில் ஏற்படும் கஷ்டங்களை பெரிதுபடுத்தாமல், கண் தெரியாதவராக சண்டைக் காட்சிகளில் விக்ரம் ஒரு கண்கட்டி வித்தையையே காட்டியிருக்கிறாராம். திரைப்படக் குழுவினரே அசந்து போகும் வண்ணம் அமைந்திருக்கிறதாம் அந்த சண்டைக் காட்சி.

மற்ற திரைப்படங்கள் எப்படி மக்களிடையே பேசப்பட்டதோ, அது போல 'தாண்டவம்' திரைப்படத்தில் இந்த உழைப்பும் பெரிதும் பேசப்படும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் விக்ரம். தாண்டவத்தை அடுத்து ஷங்கரின் 'ஐ' திரைப்படத்திற்காக தயாராகி வருகிறார் விக்ரம்.



You May Also Like

  Comments - 0

  • muzarrath Monday, 30 July 2012 08:38 AM

    உழைப்பும் உயர்வும் விக்ரமுடன் பிறந்தவை. வாழ்க விக்ரம்!

    Reply : 0       0

    niroshan Tuesday, 31 July 2012 04:14 AM

    இவர் தான் உண்மையான ஹீறோ

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X