2025 மே 20, செவ்வாய்க்கிழமை

கமலை புகழ்ந்த ரஜினி...

Menaka Mookandi   / 2012 ஜூலை 26 , பி.ப. 02:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


'தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்க்கிறார் உலக நாயகன் கமல்ஹாஸன்' என வெளிப்படையாகப் பாராட்டி மீண்டும் தன் பெருந்தன்மையை நிரூபித்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

கும்கி இசை வெளியீட்டு விழாவில் இன்று பங்கேற்ற ரஜினி, கமலை பாராட்டியுள்ளார். கமல் பற்றி அவர் பேசுகையில் 'என் கலையுலக அண்ணா கமல் அவர்களே' என்றுதான் ஆரம்பித்தார்.

தனது பேச்சில், 'சிங்கப்பூர் மருத்துவமனையில் நான் சிகிச்சை பெற்றபோது கமல் என்னை பார்க்க வந்திருந்தார். டாக்டர்கள் சந்திக்க விடாததால் வருத்தத்தோடு திரும்பினார்.

ரஜினியைப் பார்க்க நான் சிங்கப்பூர் போயும், பார்க்க அனுமதிக்கவில்லையே என்று வெளியில் சொல்ல முடியாத சூழலாகிவிட்டதே என கமல் என்னிடம் பின்னர் வருத்தத்துடன் கூறினார். ஐயாம் சாரி கமல்... நான் சென்னை திரும்பியதும் நானே உங்களை வந்து சந்திக்கிறேன் என்று தெரிவித்தேன். சென்னை திரும்பியதும் முதலில் அவரிடம்தான் பேசினேன்.

கமல் மிகச் சிறந்த கலைஞர். ஹொலிவூட் திரைப்படத்தை நடித்து இயக்க கமலுக்கு அழைப்பு வந்துள்ளது. அதுவும் சாதாரண தயாரிப்பாளரிடமிருந்தல்ல... லோர்ட் ஒப் தி ரிங்ஸ் திரைப்படத்தைத் தயாரித்த நிறுவனத்திடமிருந்து. இதன் மூலம் தமிழ் திரையுலகுக்கும், இந்தியாவுக்கும் கமல் பெருமை சேர்த்துள்ளார் என்றார்.

1986-லேயே ஹொலிவு_ட் திரைப்படமான 'ப்ளட் ஸ்டோனில்' நடித்தவர் ரஜினி என்பது குறிப்பிடத்தக்கது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X