2025 மே 20, செவ்வாய்க்கிழமை

நடிப்பு கஷ்டமானதல்ல: விஜய் அண்டனி

A.P.Mathan   / 2012 ஓகஸ்ட் 01 , மு.ப. 08:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


“எதிர்பார்த்ததுபோல் நடிப்பு கஷ்டமானதாக இருக்கவில்லை. நடிப்பை நான் மிகவும் விரும்புகிறேன்” என இசையமைப்பாளரும் நடிகரும் தயாரிப்பாளருமான விஜய் அண்டனி கூறியுள்ளார்.

பல்வேறுபட்ட வெற்றிப்பாடல்களை திரையுலகிற்கு தந்த இசையமைப்பாளர் விஜய் அண்டனி, “நான்” திரைப்படத்தினூடாக நடிகராகவும் தயாரிப்பாளராகவும் அவதரித்திருக்கிறார். இசையமைப்பில் “நான்” திரைப்படம் விஜய் அண்டனிக்கு 25ஆவது படம். அப்படத்தினூடாக நடிகராகவும் அவர் அவதாரமெடுத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை சத்யம் திரையரங்கில் இடம்பெற்றது. இந்நிகழ்வினையொட்டி ஊடகவியலாளரிடம் பேசும்போதே விஜய் அண்டனி மேற்படி கூறியுள்ளார்.

“நான்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பெருந்திரலான திரையுலக பிரபலங்கள் கலந்து சிறப்பித்தனர். இலங்கையிலிருந்தும் பல கலைஞர்கள் கலந்துகொண்டனர்.

மறைந்த ஒளிப்பதிவாளரும் இயங்குநருமான ஜீவாவின் மாணவன் ஜீவா சங்கர் - “நான்” படத்தினை இயக்கியுள்ளார். இப்படத்தின் கதாநாயகிகளாக ரூபா, அனயா மற்றும் விவா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

“நான்” திரைப்படத்திற்கு மற்றுமொரு சிறப்பிருக்கிறது. இப்படத்தின் ஒரு பாடலை நமது நாட்டின் (இலங்கை) கவிஞர் அஸ்மின் எழுதியுள்ளார். “தப்பெல்லாம் தப்பே இல்லை...” என்று தொடங்கும் பாடலையே கவிஞர் அஸ்மின் எழுதியுள்ளார். குறித்த பாடலும் அன்றைய இசை வெளியீட்டு விழாவில் ஒலிபரப்பப்பட்டமை சிறப்பானதாகும். அன்றைய இசை வெளியீட்டு விழாவில் புரவலர் காஸிம் உமருடன் கவிஞர் அஸ்மினும் கலந்துகொண்டிருந்தார்.

“ஏனைய படங்களுக்கு இசையமைப்பதைவிட எனது 25ஆவது படமாகிய இந்தப் படத்திற்கு இசையமைக்கும்போது மிகவும் அவதானமாக, நீண்ட நேரமெடுத்து இசையமைத்தேன்..” என்றும் இசையமைப்பாளர் விஜய் அண்டனி மேலும் குறிப்பிட்டார்.

“நான்” திரைப்படம் வெகுவிரைவில் திரைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.








You May Also Like

  Comments - 0

  • nanban Thursday, 09 August 2012 06:20 AM

    அஸ்மினுக்கு வாழ்த்துக்கள்

    Reply : 0       0

    Dragon Warrior Monday, 20 August 2012 05:56 AM

    இப்ப யாருங்க நடிக்கிறாங்க .. ஏதோ வந்துட்டு போறாங்க ...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X