2025 மே 20, செவ்வாய்க்கிழமை

திக்குமுக்காடும் அசின்...

Menaka Mookandi   / 2012 ஓகஸ்ட் 02 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஆரம்பத்தில் ராசியில்லாத நடிகை என்று இந்தியில் ஒதுக்கப்பட்டவர் அசின். ஆனால் இன்று அவர் நடித்த திரைப்படங்கள் மூன்று அடுத்தடுத்த 100 கோடி ரூபாவுக்கு மேல் வசூலித்துள்ளதால், முன்னணி நடிகையாக பார்க்கப்படுகிறார்.

அண்மையில் அசின் நடிப்பில் வெளியான போல்பச்சன் திரைப்படமும் 100 கோடி ரூபாவுக்கு மேல் வசூல் பார்த்துள்ளது. கரீனாகபூர் நடித்த '3 இடியட்ஸ்', 'கோல்மால் 3', 'பொடிகார்ட்', 'ராஜன்' திரைப்படங்களும் 100 கோடி ரூபாவினை வசூலித்தன. கரீனா கபூருக்கு அடுத்தப்படியாக இரண்டாவது இடத்தில் அசின் இருப்பதாகக் கூறப்படுகிறது.

பொலிவூட்டின் முன்னணி ஹீரோக்கள் பார்வை இப்போது தன்னை நோக்கித் திரும்பியிருப்பதால் மகிழ்ச்சியில் திக்குமுக்காடும் அசின், இதுபற்றிக் கூறுகையில், 'இத்தனை நாள் எனது இடம் குறித்து எனக்கே திருப்தி இல்லை.

ஆனால் இப்போது நம்பிக்கை பிறந்திருக்கிறது. எனக்கு எவ்வளவு திரைப்படங்களில் நடிக்கிறேன் என்ற எண்ணிக்கை முக்கியமல்ல. திருப்தியாக வேலை பார்க்க வேண்டும். அதுதான் முக்கியம். இந்தி திரையுலகில் இவ்வளவு பெரிய இடத்துக்கு வந்தது சந்தோஷமாக இருக்கிறது.

சினிமாவில் எனக்கு பாதுகாவலர்களோ, உறவினர்களோ ஆண் நண்பர்களோ யாரும் இல்லை. யாருடைய தயவும் இல்லாமல் எனது சொந்த காலில்தான் வளர்ந்திருக்கிறேன். தென்னிந்திய நடிகைகளை இந்தி ரசிகர்கள் இதுபோல் ஏற்றுக்கொள்வது அபூர்வம். என் விடயத்தில் அந்த அபூர்வம் நிகழ்ந்திருப்பது கடவுள் ஆசீர்வாதம்' என்றார்.


You May Also Like

  Comments - 0

  • jana Saturday, 11 August 2012 05:01 AM

    என் அசின் எப்பொதும் பெஸ்ட் தான்

    Reply : 0       0

    Dragon Warrior Monday, 20 August 2012 05:55 AM

    அதுக்குன்னு 'ஏய்ய் என் வாழ்கையில ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் நானா செதுக்கினதுடா' எண்டு டயலாக் பேசாதீங்க ......

    Reply : 0       0

    yaan Monday, 03 December 2012 05:03 AM

    all the best asin engirundhalum vazhga...

    Reply : 0       0

    yaan Monday, 03 December 2012 05:05 AM

    all the best asin..engirundhalum vazhga..

    Reply : 0       0

    yaan Monday, 03 December 2012 05:06 AM

    all the best asin

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X