2025 மே 20, செவ்வாய்க்கிழமை

அனைத்து நாயகிகளுடனும் குஷியில் சூர்யா...

Menaka Mookandi   / 2012 ஓகஸ்ட் 04 , பி.ப. 02:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


நடிகர் சூர்யாவின் மாற்றான் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா எதிர்வரும் 9ஆம் திகதி சிங்கப்பூரில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில், நடிகர் சூர்யாவுடன் இதுவரையில் ஜோடி சேர்ந்த அத்தனை நடிகைகளும் கலந்துகொள்ளவுள்ளனராம்.

அயன் திரைப்படத்துக்குப் பின்னர் கே.வி.ஆனந்த் - சூர்யா இணைந்துள்ள திரைப்படம் மாற்றான். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். சூர்யா ஒட்டிப் பிறந்த இரட்டையர் வேடத்தில் நடித்துள்ளதால் மாற்றான் திரைப்படத்துக்கு பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மாற்றான் திரைப்பட பாடல் வெளியீட்டு விழாவை மிக பிரமாண்ட நிகழ்ச்சியாக நடத்த  திட்டமிடப்பட்டுள்ளது. இதில் நடிகர், நடிகைகள் நடனம் ஆடுகிறார்கள். இசை நிகழ்ச்சியும் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

எனவே விழாவில் பங்கேற்கும்படி இதுவரை சூர்யாவுடன் ஜோடி சேர்ந்த நடிகைகள் அனைவருக்கும் கே.வி.ஆனந்த் அழைப்பு விடுத்துள்ளார். இந்த அழைப்பை ஏற்று சூர்யாவின் மனைவி ஜோதிகா மற்றும் நயன்தாரா, த்ரிஷா, அசின், ஸ்ருதிஹாசன், தமன்னா, திவ்யா ஸ்பந்தனா, சமீரா ரெட்டி ஆகியோர் விழாவில் பங்கேற்கின்றனர். மாற்றான் திரைப்படத்தில் ஜோடியாக நடிக்கும் காஜர் அகர்வாலும் கலந்து கொள்கிறார். சூர்யாவின் தம்பியான நடிகர் கார்த்தியும் இதில் கலந்து கொள்கிறார்.

இவர்கள் அனைவரும் மேடையில் அழைக்கப்பட்டு கௌரவிக்கப்படவுள்ளனர். இசையமைப்பாளர் ஹரீஸ் ஜெயராஜ் நேரடி இசை கச்சேரியை நடத்துகிறார். முன்னணியில் உள்ள பாடகர்கள் பலரும் இதில் பங்கேற்று பாடுகிறார்கள்.


You May Also Like

  Comments - 0

  • படிக்காதவன் Saturday, 04 August 2012 06:14 PM

    நடக்கட்டும்.. நடக்கட்டும்.. இவங்களுக்கு இதானே வாழ்க்கை.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X