2025 மே 20, செவ்வாய்க்கிழமை

அன்ட்ரியாவின் ஆசை...

Menaka Mookandi   / 2012 ஓகஸ்ட் 05 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


'பச்சைக்கிளி முத்துச்சரம்' திரைப்படம் மூலம் பிரபலமானவர் நடிகை அன்ட்ரியா ஜெரிமியா. நடிகையாக மட்டுமின்றி தன்னை ஒரு பாடகியாகவும் நிலை நிறுத்தியவர் அன்ட்ரியா. இவருக்கு தற்போது ஒரு ஆசை எழுந்துள்ளதாம். ஆம், நடிகர் விஜயுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்று வாய்ப்புக்காக காத்திருக்கிறாராம் அன்ட்ரியா.

கமல் ஹாசனுடன் ஒரு திரைப்படத்திலாவது நடித்துவிட மாட்டோமா என்று முன்னணி நடிகைகள் அனைவரும் ஏங்கிக்கொண்டிருக்க, அந்த வாய்ப்பு அன்ட்ரியா வீட்டு வாசலுக்கே வந்தது. இதையடுத்து அவர் கமலின் விஸ்வரூபம் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

ஏற்கனவே அவர் கமலின் மன்மதன் அம்பு திரைப்படத்தில் நாயகன் அறிமுகமாகும் பாடலை பாடியுள்ளார். இந்நிலையில் விஜயின் துப்பாக்கி திரைப்படத்தில் அவருடன் சேர்ந்து ஒரு பாடலை பாட அழைத்துள்ளனர். அன்ட்ரியாவும் சென்று பாட்டை பாடிக் கொடுத்துவிட்டு, விஜயுடன் நடிக்க ஒரு வாய்ப்பு கொடுங்களேன் என்று வாய்விட்டே கேட்டுவிட்டராம்.

இப்படித் தான் லக்ஷ்மி ராய் இயக்குனர் விஜயிடம் நடிகர் விஜயுடன் நடிக்க வேண்டும் என்ற தனது ஆசையை தெரிவித்தார். அதற்கு அவரும் தான் விஜயை வைத்து எடுக்கும் திரைப்படத்தில் நடிக்க வைக்கிறேன் என்று கூறியுள்ளார். ஆனால் அன்ட்ரியாவுக்கு அப்படி யாரும் வாக்கு கொடுத்தது போன்று தெரியவில்லை என இந்திய திரையுலகச் செய்திகள் தெரிவிக்கின்றன.



You May Also Like

  Comments - 0

  • Dragon Warrior Monday, 20 August 2012 05:52 AM

    எதுக்கும் அனிருத் கிட்ட ஒரு வார்த்தை கேட்டுகோங்க

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X