2025 மே 20, செவ்வாய்க்கிழமை

மறுபடியும் இணைந்த சிம்பு – நயன்

Menaka Mookandi   / 2012 ஓகஸ்ட் 07 , மு.ப. 08:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிம்புவும் நயன்தாராவும் தங்கள் நட்பையும் உறவையும் புதுப்பித்துக் கொண்டுள்ளனர் என்பதுதான் திரையுலகின் புதிய செய்தி. சினிமா காதலர்களில் ஏக பரபரப்பைகத் கிளப்பிய ஜோடி சிம்பு - நயன்தாராதான்.

வல்லவன் திரைப்படத்தில் நடிக்கும்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. அதன்பிறகு இருவரைப் பற்றியும் செய்தி வராத நாளே இல்லை எனும் அளவுக்கு இருவரும் சுற்றித் தீரிந்தார்கள். கணவன் - மனைவி போலத்தான் அனைத்து இடங்களுக்கும் சென்று  வந்தார்கள் என்று செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில் திடீரென்று இருவரும் பிரிந்துவிட்டார்கள். இதற்கான காரணங்களை இருவருமே சொல்லவில்லை. ஆனால் நயன்தாரா மட்டும், சிம்பு தனக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டதாக ஹைதராபாதில் கண்ணீருடன் பேட்டி கொடுத்திருந்தார்.

அதன்பிறகு தமிழில் நாட்களாக நடிக்காமலே இருந்தார் நயன்தாரா. பின்னர் மெல்ல அவரை மீண்டும் தமிழுக்கு வரவைத்தார்கள். ரஜினியெல்லாம் தலையிட்டு நயனுக்கு ஆறுதல் சொல்லி, தன் சிவாஜி, குசேலன் போன்ற திரைப்படங்களிலேயே வாய்ப்புக் கொடுத்தார் அதைத் தொடர்ந்து தனது அடுத்த ரவுண்டை தமிழ்த் திரையுலகில் ஆரம்பித்த நயன்தாரா.

இந்நிலையில் வில்லு திரைப்படத்தில் நடித்தபோது அவருக்கும் திரைப்படத்தின் இயக்குநர் பிரபுதேவாவுக்கும் காதல் ஏற்பட்டது. அதன் பிறகு, நயன்தாரா - பிரபு தேவா காதல் விவகாரம்தான் கடந்த நான்கு வருடங்களாக ஊடகங்களின் முதன்மைச் செய்தியாக இருந்தது. நயன்தாரா காதலுக்காக தன் மனைவியை விவாகரத்து செய்தார் பிரபு தேவா.

இன்னொரு பக்கம், பிரபுதேவாவை திருமணம் செய்ய, மதம் மாறி, கையில் அவர் பெயரை பச்சைக் குத்திக்கொண்டு நயன்தாரா தயாராக இருந்த நிலையில், இருவரின் காதலும் திடீரென முறிந்தது. இதற்கும் காரணம், பிரபுதேவாவின் நம்பிக்கை துரோகம் என்று பேட்டியளித்தார் நயன்தாரா.

இப்போது, மீண்டும் தமிழ்த் திரைப்படங்களில் பிஸியாகிவிட்டார் நயன். கூடவே காதல் தோல்வியில் அவர் தவித்த சூழலில், மீண்டும் தன் பழைய காதலன் சிம்புவுடன் நெருக்கமாகியுள்ளார். பிரபுதேவாவுடன் காதல் இருந்தபோதே, நயனும் சிம்புவும் பேசி வந்தனர் என்றும் ஒரு தகவல் உள்ளது.



You May Also Like

  Comments - 0

  • படிக்காதவன் Wednesday, 08 August 2012 11:55 PM

    சினிமாவுக்கு வாரவங்க வெக்கம், மானம், மரியாத, சூடு, சொரண எல்லாம் தொறந்துட்டுத்தானே வருவாங்க. இதெல்லாம் ஒங்களுக்குத் தெரியாதா?

    Reply : 0       0

    Dragon Warrior Monday, 20 August 2012 05:37 AM

    நமக்கு எதுக்குங்க வம்பு.. ???

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X