2025 மே 20, செவ்வாய்க்கிழமை

திருமணத்துக்கு முன் தாயானார் ஹன்ஸிகா...

Menaka Mookandi   / 2012 ஓகஸ்ட் 09 , மு.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


அழகு என்பது வெறும் புறத்தோற்றத்தில் மட்டும் இல்லை. அது நாம் நடந்துகொள்ளும் விதத்திலும் எமது குணாதிசயங்களிலும் அன்பு, கருணை, பாசம் போன்றவற்றிலேயே தங்கியுள்ளது என்பதை பலரும் புரிந்துகொள்ள மறந்துள்ளனர்.

ஆனால், அதை நன்றாகப் புரிந்து அதன்படி நடந்து தமது வாழ்க்கையையும் பிறப்பையும் அர்த்தமுள்ளதாக்கியவர்களில் நடிகை ஹன்ஸிகாவும் ஒருவர்.

நடிகை ஹன்ஸிகாவுக்கு இன்று பிறந்தநாள். பொதுவாக பிறந்த நாளன்று பார்ட்டி, ஆட்டம் பாட்டம் என தூள் கிளப்புவார்கள் நடிகர் நடிகைகள். ஆனால் ஹன்ஸிகா மிகவும் வித்தியாசமானவர். கடந்த முறை தனது பிறந்த நாளன்று இரு ஏழைக் குழந்தைகளைத் தத்தெடுத்தார்.

இந்த பிறந்த நாளிலும் ஏதாவது நல்ல விடயத்தைச் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் குடிசைப் பகுதியைச் சேர்ந்த மேலும் இரு குழந்தைகளைத் தத்தெடுத்துள்ளார். இவர்களின் படிப்பு உள்ளிட்ட அனைத்துச் செலவுகளையும் ஹன்ஸிகாவே பொறுப்பேற்றுள்ளார்.

தனது பிறந்த நாளை அர்த்தமுள்ளதாகக் கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில் நான் இந்த நடவடிக்கையை எடுத்ததாக தெரிவித்துள்ளார் ஹன்ஸிகா.

இந்நிலையில், தனது தத்துக் குழந்தைகளுடன் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடப் போகிறாராம் ஹன்ஸிகா.






You May Also Like

  Comments - 0

  • Tamilselvi Friday, 10 August 2012 08:12 AM

    பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஹன்சிகா

    Reply : 0       0

    aabith Monday, 29 April 2013 11:24 AM

    சூப்பர்...!!!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X