2025 மே 20, செவ்வாய்க்கிழமை

கல்லூரி விழாக்களில் கலந்துகொள்ள பணம் கேட்ட சினேகா, பரத்...

Menaka Mookandi   / 2012 ஓகஸ்ட் 11 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


கல்லூரி விழாக்களில் கலந்துகொள்வதற்காக விழா ஏற்பாட்டாளர்களிடம் பணம் கேட்டார்கள் என்று நடிகை சினேகா மற்றும் நடிகர் பரத் ஆகியோருக்கு எதிராக கண்டன அறிக்கைகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

இது தொடர்பில் இந்து மகாசபை என்ற அமைப்பு விடுத்துள்ள கண்டன அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

'இந்து மதம் பாரம்பரிய பெருமைகள் பலவற்றைக் கொண்டுள்ளது. சேவை மனப்பான்மையுடன் இந்து மக்களுக்காக ஏராளமான பொதுச்சேவைகளைச் செய்து வருகின்றது.

அண்மையில் காயிதே மில்லத் கல்லூரியில் நடைபெற்ற விழாவொன்றில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க நடிகர் பரத்தை மாணவர்கள் அழைத்தனர். ஆனால் அந்த விழாவில் பங்கேற்க நடிகர் பரத் 5 இலட்சம் ரூபாவைக் கேட்டாராம்.

பரத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, மாணவர்களாகிய ரசிகர்கள்தான் உங்களுக்கு அடையாளம் தந்து உயரத்தில் ஏற்றி வைத்துள்ளனர். கல்லூரி விழாவுக்கு வர பணம் கேட்கலாமா? என இந்து மகாசபை கேட்டபோது அதற்கு பதிலளிக்காத பரத், தொடர்பைத் துண்டித்துவிட்டார்.

இதன்பின்னர், நடிகை சினேகாவை விழாவில் கலந்துகொள்ளுமாறு அழைத்தோம். அங்கும் இதே பதில்தான் கிடைத்தது. வேறு பல நடிகர்களையும் அழைத்தோம். அவர்களும் இலட்சக்கணக்கில் பணம் கேட்டார்கள். நடிகர்களை பற்றி மக்கள் அறிந்துகொள்ள வேண்டும். இளைஞர்கள் இனிமேல் விழிப்புணர்வுடன் செயல் படவேண்டும்' என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X