2025 மே 19, திங்கட்கிழமை

சிந்து மேனன் தற்கொலை முயற்சி

Menaka Mookandi   / 2013 செப்டெம்பர் 06 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


பிரபல நடிகை சிந்து மேனன் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயனற நிலையில் சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சமுத்திரம் திரைப்படம் மூலம் திரையுலகுக்கு வந்தவர் சிந்து மேனன். கேரளாவைச் சேர்ந்த இவர், கடல்பூக்கள், யூத், ஈரம் உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மேலும் தமிழ் தவிர தெலுங்கு, மலையாளம், கன்னட மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில், கடந்த 2010ஆம் ஆண்டு டொமினிக் பிரபு என்ற தமிழரை திருமணம் செய்து கொண்டார்.

தற்போது தற்கொலைக்கு முயன்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிந்து மேனனுக்கு வைத்தியர்கள் தீவிர சிகிச்சையளித்து வருவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X