2025 மே 19, திங்கட்கிழமை

காஜலின் புதிய அவதாரம்...

Menaka Mookandi   / 2013 செப்டெம்பர் 09 , மு.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஏற்கனவே அனுஷ்கா, பிரியாமணி, ஸ்ரேயா, நீத்துசந்திரா ஆகியோர் சிறப்பு பயிற்சி பெற்று சண்டை காட்சிகளில் நடித்து தாங்களும் முண்ணனி நடிகர்களுக்கு கொஞ்சமும் சளைத்தவர்கள் இல்லை என்பதை அக்ஷன் காட்சிகள் மூலம் நிரூபித்தனர்.

அதேபோல் 'தலைவா' திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த அமலா போல் பொலிஸ் கெட்டப்பில் அக்ஷன் காட்சிகளில் நடித்து அசத்தினார். அந்த வரிசையில் காஜல் அகர்வாலும் இணைந்துள்ளார்.

'துப்பாக்கி' திரைப்படத்துக்குப் பின் விஜய் ஜோடியாக 'ஜில்லா' திரைப்படத்தில் நடிக்கிறார் காஜல். இதில் அவருக்கு பொலிஸ் அதிகாரி கதாபாத்திரம். அண்மையில் அவர் நடித்த விறு விறு சண்டை காட்சிகள் சென்னையில் சிறப்பு அரங்கம் அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டன. பொலிஸ் சீருடையில் வில்லன்களுடன் மோதினார்.

முதன் முதலாக சண்டை காட்சிகளில் நடித்த அனுபவம் பற்றி காஜல் கூறுகையில், 'அக்ஷன் காட்சிகளில் நடிக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை. அதற்காக காத்திருந்தேன். வாய்ப்புகள் சரி வர அமையவில்லை.

'ஜில்லா' திரைப்படத்தில் கேட்ட போது, எனக்கு பொலிஸ் கதாபாத்திரம் பொருந்துமா என்ற சந்தேகம் இருந்தது. அதற்காக பொலிஸ் உடை அணிந்து டெஸ்ட் ஷூட் எடுத்த பின் பொலிஸ் வேடம் எனக்கு பொருத்தமாக இருப்பதாக பலரும் கூறினர். அதன் பின்னரே இந்த வேடத்தில் நடித்திருக்கிறேன்' என்கிறார் காஜல்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X