2025 மே 19, திங்கட்கிழமை

வாளோடு பாயும் ரஜினி; கோச்சடையான் டிரெய்லர்

Menaka Mookandi   / 2013 செப்டெம்பர் 09 , பி.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தின் 'கோச்சடையான்' திரைப்படத்துக்கான படப்பிடிப்பு  முடிவடைந்து, டப்பிங், ரீ – ரெக்கோர்டிங், மிக்சிங், கிராபிக்ஸ் போன்ற பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் திரைப்படத்தின் டீஸர் விநாயகர் சதுர்த்தியன்று வெளியாகும் என்று கோச்சடையான் திரைப்படத்தின் இயக்குனர் சௌந்தர்யா அறிவித்திருந்தார். இதற்கமைய நேற்று காலை 9.30 மணிக்கு டீஸர் வெளியிடப்பட்டது.

டிரெய்லர் ஆரம்பத்தில் பிரமாண்ட அரண்மனை காண்பிக்கப்படுகிறது. அதன்பிறகு பெரிய மைதானம் ஒன்றை காட்டுகின்றனர். தொடர்ந்து குதிரை படை வீரர்களுடன் ரஜினி வாளோடு பாய்ந்து வருகிறார். பறந்து சண்டையும் போடுகிறார்.

படை வீரர்களுடன் பிரமாண்ட பாடல் காட்சியிலும் கம்பீரமாக நடந்து வருகிறார். சித்தர் கோலத்தில் காலை உயர்த்தி கையில் பிடிக்கும் காட்சி பிரமிக்க வைக்கிறது. ஏ.ஆர்.ரகுமான் பின்னணி இசையில் மிரட்டுகிறார். அனிமேஷனில் ரஜினி இளமையாக தெரிகிறார். நடை, நடனங்களில் வசீகர ஸ்டைல். முழுமையான கமர்ஷியல் திரைப்படமாக தயாராகியுள்ளது.

3 டியில் இத்திரைப்படம் உருவாகியுள்ளது. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 25 வயது தோற்றத்தில் ரஜினியை கொண்டு வந்துள்ளனர். தந்தை கதாபாத்திரம் நீண்ட தலை முடியுடன் சிவன் பக்தராக சித்தரிக்கப்பட்டு உள்ளது. இத்திரைப்படத்தில் 800 தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றியுள்ளனர்.
 
நாகேஷ் தோற்றத்திலும், புது கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தை தமிழ், தெலுங்கு, இந்தியில் வெளியிடுகின்றனர். ஆங்கிலம், ஜப்பான் மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X