2025 மே 19, திங்கட்கிழமை

ஹன்சிகா – சிம்பு திருமணம் எப்போது?

Menaka Mookandi   / 2013 செப்டெம்பர் 19 , மு.ப. 07:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


நடிகை ஹன்சிகாவுக்கு திருமணம் எப்பொழுது என்பது குறித்து அவரது தாய் மோனா மோத்வானி விளக்கமளித்துள்ளார். கோலிவூட்டில் டொப் கியரில் சென்ற ஹன்சிகா தான் சிம்புவை காதலிப்பதை அனைவருக்கும் தெரிவித்தார். இதையடுத்து அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் ஹன்சிகா - சிம்பு திருமணம் குறித்து அவரது தாய் மோனா மோத்வானி விளக்கம் அளித்துள்ளார். 'ஹன்சிகா கையில் 9 திரைப்படங்கள் உள்ளன. அவர் தற்போது மான் கராத்தே படத்தில் நடித்து வருகிறார். அடுத்த மாதம் சுந்தர். சி.யின் அரண்மனை திரைப்பட ஷூட்டிங்கில் கலந்து கொள்கிறார் என்றார் மோனா.

ஹன்சிகா நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வருவதால் இப்போதைக்கு திருமணம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார் மோனா. ஹன்சிகாவிடம் சிம்பு பற்றி ஒரு முன்னணி நடிகை போட்டுக் கொடுத்துள்ளாராம். இதையடுத்து ஹன்சிகா சிம்புவுடன் பேசுவதையே நிறுத்திவிட்டார் என்று கூறப்பட்டது.

இந்நிலையில், டுபாயில் நடைபெற்ற 'சிமா' விருது விழாவில் 'ஒரு கல் ஒரு கண்ணாடி' திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதை ஹன்சிகா பெற்றுக்கொண்டார். நடிகை ஸ்ரீதேவியின் கையால் அந்த விருதைப் பெற்றுக்கொண்டதை நினைத்து நினைத்து பூரிக்கிறாராம் ஹன்ஸிகா.






You May Also Like

  Comments - 0

  • kamal Friday, 25 October 2013 06:00 PM

    நல்ல ஜோடி. வாழ்க வளமுடன்...

    Reply : 0       0

    jaya Thursday, 23 January 2014 06:46 AM

    கண்ணு பட போகுது, அழாக இருக்கிங்க...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X