2025 மே 19, திங்கட்கிழமை

மீண்டும் சிம்பு – நயன்...

Menaka Mookandi   / 2013 ஒக்டோபர் 10 , மு.ப. 08:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


'ராஜா ராணி' திரைப்படத்தின் வெற்றி விழாவில் நயன்தாராவிற்கு கேக் ஊட்டி வெற்றியை பகிர்ந்து கொண்டார் ஆர்யா. இந்த விழாவில் நடிகர் சிம்புவும் பங்கேற்றார் என்பதுதான் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது.

ஆர்யா - நயன்தாரா, ஜெய் - நஸ்ரியா நடித்துள்ள ராஜா ராணி திரைப்படத்தின் வெற்றி விழா சென்னையில் நேற்று கொண்டாப்பட்டது. இந்த திரைப்படத்தின் குழுவினர் சென்னை நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இந்த பார்ட்டிக்கான ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்த விழாவில் 'ராஜாராணி' திரைப்படத்தில் நடித்த ஆர்யா, ஜெய், நயன்தாரா மற்றும் இயக்குனர் அட்லி, இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ், ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

விழாவில் கேக் வெட்டி அதை ஒருவருக்கொருவர் ஊட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஆர்யா, நயன்தாராவுக்கு கேக் ஊட்டினார். பதிலுக்கு ஆர்யாவும் நயன்தாராவுக்கு கேக் ஊட்டி மகிழ்ந்தார்.

இந்த பார்ட்டியில் சிம்பு, ஜீவா, ஷாம், சாந்தனு, ஸ்ரீகாந்த், உதயநிதி ஸ்டாலின், உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் கலந்து கொண்டனர். நயன்தாரா பார்ட்டியில் சிம்பு பங்கேற்றது பரபரப்பாக பேசப்பட்டது.

ரம்யா கிருஷ்ணன், கார்த்திகா, ஆண்ட்ரியா, சோனியா அகர்வால் உள்ளிட்ட நடிகைகளும் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் சண்முக சுந்தரம் ஆகியோர் படத்தில் வேலை செய்த தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் தங்க சங்கிலி ஒன்றை பரிசாக அளித்தனர்.




You May Also Like

  Comments - 0

  • ilaahi Thursday, 10 October 2013 10:47 AM

    இதெல்லாம் 9ன் தாராவிக்கு செட்டெ... ஆஹாது! நொ... னொ... ஆரியா மட்டும் போதும்...

    Reply : 0       0

    sara Thursday, 10 October 2013 04:48 PM

    அரசியலில் இதெல்லாம் ச‌கஜமப்பா....

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X