2025 மே 19, திங்கட்கிழமை

அஜீத்தின் பெருந்தன்மை; நயன் பாராட்டு

Menaka Mookandi   / 2013 ஒக்டோபர் 28 , மு.ப. 07:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


அஜீத் குமார் போன்று பெருந்தன்மை வேறு யாருக்கும் வராது என்று நடிகை நயன்தாரா தெரிவித்துள்ளார். அஜீத் குமார், நயன்தாரா, ஆர்யா, தப்ஸி ஆகியோர் நடித்துள்ள 'ஆரம்பம்' திரைப்படம் எதிர்வரும் 31ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது.

இந்த திரைப்படத்தில் அஜீத்துடன் ஏற்கனவே ஜோடி சேர்ந்த நயன்தாரா மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளார். இந்நிலையில் தனது ஆரம்பம் ஹீரோ அஜீத் பற்றி நயன் கூறுகையில்,

'அஜீத் குமார் போன்று ஒரு நல்ல மனமுள்ள நடிகரை என் அனுபவத்தில் நான் பார்த்தே இல்லை என்று நயன்தாரா தெரிவித்தார். படப்பிடிப்புக்கு முன்னணி ஹீரோக்கள் வந்துவிட்டார்கள் என்றால் மற்றவர்களை காக்க வைத்துவிட்டு அவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளை முதலில் எடுக்க வேண்டும் என்று நினைப்பார்கள். இயக்குனர்களும் அப்படித் தான் செய்வார்கள்' என்று நயன் கூறினார்.

'அஜீத் படப்பிடிப்புக்கு வந்தால் பிறரை வைத்து எடுக்கப்படும் காட்சிகள் எடுத்து முடிக்கப்படும் வரை பொறுமையாக காத்திருப்பார். காட்சிகள் நன்றாக வர வேண்டும் என்று நினைக்கும் அவர் யார் நடிப்பிலாவது குறை இருந்தால் டிப்ஸ் கொடுப்பார்' என்றார் நயன்.

'முன்னணி ஹீரோவாக இருந்தும் மற்றவர்களின் காட்சிகள் படமாக்கப்படும் வரை காத்திருக்கம் பெருந்தன்மை அஜீத்தை தவிர வேறு யாருக்கும் வராது' என்று நயன் கூறினார்.



You May Also Like

  Comments - 0

  • alexpandiyan Friday, 08 November 2013 07:02 AM

    தல தலதான்...........

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X