2025 மே 19, திங்கட்கிழமை

ஆர்யாவுக்கு சத்திரசிகிச்சை...

Menaka Mookandi   / 2013 ஒக்டோபர் 29 , பி.ப. 12:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


கடந்த சில நாட்களுக்கு முன் படப்பிடிப்பின் போது நடிகர் ஆர்யாவின் வலது காலில் சிறிய காயம் ஏற்பட்டது. அதை பொருட்படுத்தாமல் அவர் தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்தார்.

இந்த நிலையில் காலில் வலி அதிகமாகவே மருத்துவரின் ஆலோசனையின் பேரில் அவர் செவ்வாய்க்கிழமை வலது காலில் ஒரு சிறிய சத்திர சிகிச்சையை மேற்கொண்டுள்ளாஇ. சத்திர சிகிச்சை செய்துகொண்ட ஆர்யா தற்போது வீட்டில் ஓய்வெடுத்து வருவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, சினிமா மட்டுமே போதும் என்று இருந்து விட்டால், வாய்ப்புகள் மங்கும் காலத்தில் அல்லாட வேண்டி வரும் என்ற கோடம்பாக்க வாழ்க்கைப் பாடத்தை இந்த இளம் வயதிலேயே தெளிவாகத் தெரிந்து சினிமாவில் சம்பாதித்ததில் ஒரு பெரும் பகுதியை வேறு வகையில் முதலீடு செய்வருகிறார் ஆர்யா.

அதில் ஒன்று ஹோட்டல் பிஸினஸ். அண்ணா நகரில் ஆரம்பித்த பிரியாணி ஹோட்டலுக்கு சென்னையில் வேறு பகுதிகளிலும் கிளைகளை திறந்துள்ளார். அடுத்து அவர் கால்பதித்திருப்பது ரியல் எஸ்டேட்டில்.

அஜீத்துடன் இவர் நடித்த 'ஆரம்பம்' திரைப்படத்திற்கு முதலில் இவருக்கு பேசப்பட்டது நான்கு கோடிதானாம். ஆனால் பின்னர் தன் கேரக்டருக்கு இது பத்தாது என ஆர்யா பிடிவாதம் பிடித்ததால் மேலும் ஒரு கோடி சம்பளம் தரப்பட்டதாகச் சொல்கிறார்கள்.

இந்த பணத்தை அப்படியே கொண்டுபோய் கொச்சி அருகே பெரிய நிலப்பரப்பை வாங்கிப் போட்டுள்ளாராம். சில மாதங்களுக்கு முன் அவர் வாங்கிய இந்த நிலத்துக்கு இப்போது ஆறு மடங்கு விலை உயர்ந்துவிட்டதாம். இதைப் பார்த்து, ரொம்பவே குஷியாகிவிட்ட ஆர்யா, தொடர்ந்து நிலங்களைத் தேடி வருகிறாராம்.

கொச்சி பக்கத்தில் பலரும் ஆர்யாவின் சார்பில் வருவதாகக் கூறி நிலங்களுக்கு பேரம் பேசுகிறார்களாம். ஜம்ஷெட் சேத்திரகாட் எனும் ஆர்யாவின் சொந்த மாநிலம் கேரளா என்பது குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X