2025 மே 19, திங்கட்கிழமை

தமன்னாவால் ஓடும் ஹீரோக்கள்

Menaka Mookandi   / 2013 நவம்பர் 04 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


தமன்னாவுடன் டான்ஸ் ஆட வேண்டும் என்பதை நினைத்தாலே தெலுங்கு ஹீரோக்கள் தெறித்து ஓடுகிறார்களாம். தமன்னா தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார்.

அவர் டான்ஸ் ஆடுவதில் வல்லவர். எவ்வளவு கஷ்டமான ஸ்டெப்பாக இருந்தாலும் ஒரே டேக்கில் ஓகே செய்துவிடுவார். அவர் சோலோவாக ஆடும்போது பிரச்சினை இல்லை.

ஆனால் டூயட் பாடல்களுக்கு நடனமாடும் தெலுங்கு ஹீரோக்கள் அதிலும் சீனியர்களுக்கு மூச்சு முட்டுகிறதாம். தமன்னா வேகத்திற்கு ஈடுகொடுத்து ஆட முடியாமல் ஹீரோக்கள் அல்லாடுகிறார்களாம்.
 
அதனால் டான்ஸ் மாஸ்டரை அழைத்து ஸ்டெப்ஸ் போடும்போது எங்களை மனதில் வைத்து சொல்லிக் கொடுங்கள். தமன்னாவை நினைத்து ஸ்டெப்ஸ் வேண்டாம், எங்களால் முடியவில்லை என்கிறார்களாம்.

ஹீரோக்கள் தனக்கு ஈடாக ஆட முடியாததால் தன்னால் தனது நடனத் திறமை முழுவதையும் வெளிப்படுத்த முடியவில்லை என்று கவலை கொண்டுள்ளாராம் தமன்னா.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X